"தமிழகத்தில், பி.எட்., படிப்பிற்கு, சர்வதேச
தரத்தில், பாடத் திட்டங்களை உருவாக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர், விசுவநாதன் தெரிவித்தார்.
அவர், மதுரையில் கூறியதாவது: தமிழகத்தில், 50க்கும் மேற்பட்ட பி.எட்., கல்லூரிகளின் அமைவிடம், ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டது. இதில், அடிப்படை வசதிகள் இல்லாத கல்லூரிகளுக்கு, நோட்டீஸ் அனுப்பி, நிவர்த்திக்க நடவடிகக்கை எடுக்கும்படி, அறிவுறுத்தப்பட்டது.
நாங்கள் சுட்டிக் காட்டிய குறைகளை, நிவர்த்தி செய்யாமல், நிவர்த்தி செய்ததாக சில கல்லூரிகள், பதில் அனுப்பின. மீண்டும் நடத்தப்பட்ட ஆய்வில், அது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மதுரை, சேலம், நாகபட்டினம் மாவட்டங்களில், தலா, ஒரு பி.எட்., கல்லூரிகளின் அனுமதி ரத்து செய்யப்பட்டு, அவற்றை மூட, உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் இந்தாண்டு, மாணவர்கள் சேர்க்கை இருக்காது. இவ்வாறு, விசுவநாதன் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...