Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி மாணவர்களுக்கு கணித அறிவாற்றல் குறைவு


              ஐந்தாம் வகுப்பு பயிலும் 46.5 சதவிகித மாணவர்களுக்குக் கணித அறிவாற்றல் மிகவும் குறைவாக உள்ளது என்று இந்திய அளவில் தனியார் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது,
 
           என ஆவடி கனரகத் தொழிற்சாலை உதவி கணக்குத் தணிக்கையாளர் ஆர்.அருளானந்தன் கூறினார்.சென்னையை அடுத்த பனப்பாக்கம் ஸ்ரீகிருஷ்ணா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் 4-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியது: இந்தியாவில் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கல்விக்கென ஒதுக்கும் தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது 11.7 சதவீதமாக உள்ளது. கடந்த 2004-ல் தனிநபருக்கு ஒதுக்கப்பட்ட ரூ.888 தற்போது ரூ.2 ஆயிரத்து 985 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

          உலகில் அதிக இளைய தலைமுறையினரைக் கொண்ட நாடாகத் திகழ்ந்து வரும் இந்தியாவுக்கு, இளைய தலைமுறையினரை கல்வி அறிவாற்றல் மிக்கவர்களாக மேம்படுத்தும் பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. அதை திறம்பட செயல்படுத்த ஆசிரியர் சமூகத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் ஆகும்.

             அண்மையில் அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 5-ஆம் வகுப்பு பயிலும் 46.5 சதவிகித மாணவர்களுக்கு எளிய கூட்டல், கழித்தல் கணக்குக் கூட தெரியவில்லை என்று தெரியவந்துள்ளது. அவர்களுக்குச் சரியாகக் கற்பிக்கப்படவில்லை. பள்ளி ஆசிரியர்களின் அலட்சியமும், கவனக்குறைவும் தான் மாணவர்களின் கணித அறிவாற்றல் குறைவுக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.

                விழாவில் 181 மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்பட்டது. ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவர் ஆர்.விவேகானந்தன், முதல்வர் எம்.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive