கோடை விடுமுறைக்குப் பின், தமிழகம் முழுவதும்,
நாளை (10ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அனைத்து வகுப்பு
மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு முடிந்தபின், ஏப்ரல், மே மாதங்களில், கோடை
விடுமுறை விடப்பட்டது. 2013 -14ம் கல்வி ஆண்டை, கடந்த, 3ம் தேதி முதல்
துவக்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டு இருந்தது.
ஆனால், கடும் வெயில் காரணமாக, பள்ளி திறப்பதை,
10ம் தேதிக்கு தள்ளி வைத்து, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகம்
முழுவதும், நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளும், நாளை திறக்கப்படுகின்றன. மாணவ, மாணவியர் அனைவரும், பள்ளிகளுக்குச் செல்ல, உற்சாகத்துடன் தயாராக உள்ளனர். ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை மட்டும் அமலில் இருக்கும், முப்பருவ கல்வி திட்டம், இந்த ஆண்டு, 9ம் வகுப்பிலும் அமலுக்கு வருகிறது. எனவே, 9ம் வகுப்பு மாணவர்களுக்கும், மூன்று பகுதிகளாக பிரித்து, பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். பாடப் புத்தகங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்
பயிலும், 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு, நாளை காலை பள்ளி
திறந்ததும், இலவச பாடப் புத்தகங்கள் வழங்க, அனைத்து ஏற்பாடுகளும்
செய்யப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...