முதுகலை ஆசிரியர் பணியிட எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (14ம்
தேதி) கடைசி நாளாகும். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி
தேர்வு விண்ணப்பங்கள் 17ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்க இன்று (14ம் தேதி) கடைசி நாளாகும்.
இதனால் கடந்த ஒரு சில நாட்களாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முதுகலை
பட்டதாரிகளின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் மூலம் சுமார் 6 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையானது. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (14ம் தேதி)
கடைசி நாள் என்பதால் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான கல்வித் துறை அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூலை மாதம் 21ம் தேதி
நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தேர்வுக்காக முழு வீச்சில்
தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி
தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் 17ம் தேதி
முதல் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து
சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். இதற்கான
ஏற்பாடுகளை கல்வித் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...