அரசு அங்கீகாரமில்லாத தனியார் பள்ளிகளில் மாணவர்கள்
சேர்க்கை நடைபெற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ.,
எச்சரித்துள்ளார்.
மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் செயல்பட்ட 44 மழலையர்
மற்றும் தொடக்கப் பள்ளிகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும்,
இப்பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளை அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்
பள்ளிகள், அங்கீகாரம் பெற்ற மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளில்
சேர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, விருத்தாசலம் கோட்டத்தில் திட்டக்குடி இந்தியன்
பள்ளி, கருவேப்பிலங்குறிச்சி ஜே.வி.சஸ், ராஜேந்திரபட்டிணம் பாரதி,
சத்தியவாடி எஸ்.டி.எஸ்., புதுக்குப்பம் நேரு பள்ளி உட்பட 16 பள்ளிகள்
அங்கீகாரம் பெறாமல் உள்ளது.
இவற்றிலிருந்து, மாற்றுச்சான்றிதழை பெற்று, அருகிலுள்ள
பள்ளிகளில் சேர்த்திட அந்தந்த பகுதி உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களை,
பெற்றோர்கள் அணுகுமாறு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை மாற்று பள்ளிகளில் சேர்த்து
கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும். மேலும், மூடப்பட்ட பள்ளிகளில் மாணவர்
சேர்க்கை நடைபெறக் கூடாது.
மாறாக, சேர்க்கையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, ஆர்.டி.ஓ., கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...