Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வில் சாதித்த மாணவர்கள்: தவிக்கும் கல்வித்துறை அதிகாரிகள்


          பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 211 மாணவர்கள், முதல் மூன்று இடங்களை பிடித்திருப்பதால், இவ்வளவு பேரையும், முதல்வர் அலுவலகத்திற்கு, எப்படி அழைத்துச் செல்வது என, தெரியாமல், கல்வித்துறை அதிகாரிகள், தவித்து வருகின்றனர்.
 
           வழக்கமாக, இரு பொதுத் தேர்வுகளிலும் சேர்த்து, மாநில அளவில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, 20க்குள் இருக்கும். இரு தேர்வு முடிவு வெளியான, ஓரிரு தினங்களுக்குள், மாணவ, மாணவியர், முதல்வரை சந்திப்பர்.

             அப்போது, சாதித்த மாணவர்கள், உயர்கல்வி படிப்பதற்கான செலவை, தமிழக அரசே ஏற்பதற்கான சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுக்கான காசோலை ஆகியவற்றை, முதல்வர் வழங்கி, பாராட்டுவார். ஆனால், இந்த ஆண்டு, எப்போதும் இல்லாத அளவிற்கு, மாநில அளவில் சாதித்த மாணவர்கள் எண்ணிக்கை, 211ஆக உயர்ந்துவிட்டது.

         அதிலும், பத்தாம் வகுப்பு தேர்வில், முதல் இடத்தை, ஒன்பது மாணவர்களும், இரண்டாம் இடத்தை, 52 மாணவர்களும், மூன்றாம் இடத்தை, 137 மாணவர்களும் பெற்றுவிட்டனர். 198 மாணவர்கள், மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

                        பிளஸ் 2 தேர்வில், முதல் இடத்தில், இரு மாணவர், இரண்டாம் இடத்தில், இருவர், மூன்றாம் இடத்தில், ஒன்பது மாணவர்கள் என, 13 பேர் உள்ளனர். இரு தேர்விலும் சேர்த்து, 211 மாணவர்கள் இருப்பதால், இவ்வளவு பேரையும், எப்படி, முதல்வர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வது என, தெரியாமல், கல்வித்துறை, தவித்து வருகிறது.

              பணி நியமனம் போல், நான்கு, ஐந்து பேரை மட்டும் அழைத்துச் செல்ல முடியாது; அப்படி செய்தால், பிற மாணவர்கள் வருத்தப்பட நேரிடும் என்பதால், இந்த யோசனை, நிராகரிக்கப்பட்டு உள்ளது.

             இந்த பிரச்னையால், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி, 10 நாட்கள் கடந்த நிலையிலும், இன்னும், மாணவர்களால், முதல்வரை சந்திக்க முடியாத நிலை உள்ளது.




1 Comments:

  1. தனியாக ஒரு சிறிய விழாவை நடத்தி சாதனை மாணவர்களை கவுரவிக்க வேண்டியது தான். அது மற்ற மாணவர்களுக்கு நல்ல ஊக்குவித்தலாக அமையும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive