2013 –
2014 ஆம் கல்வியாண்டு துவங்கியுள்ள இந்நேரத்தில்
ஆசிரியர்களுக்கு
காத்திருக்கும் பணிகளை மற்றவர்களும் தெரிந்துகொள்ள நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
1.
தொடக்கப்
பள்ளிகளிலிருந்தும், நடுநிலைப் பள்ளிகளிலிருந்தும், உயர்நிலைப் பள்ளிகளிலிருந்தும் 6, 9 மற்றும் 11 ஆம் வகுப்பில் வந்து சேர உள்ள புதிய மாணவர்களைச் சேர்த்தல்.
2.
இயல்பாகவே புதிய பள்ளிச் சூழ்நிலை அவர்களுக்கு ஒருவித
அச்சத்தையும், தயக்கத்தையும், கலவரத்தையும் ஏற்படுத்தும். (சிலரால் நமக்கே
ஏற்படும் என்பதும் உண்மை!) அதைத் தவிர்க்க ஆவன செய்தல்.
3. விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், வரைபடநூல்கள், புத்தகப்பைகள், காலணிகள், வரைபடப்பெட்டிகள், சைக்கிள்கள், மடிக்கணினிகள், . . . . . போன்றவற்றை மாணவ, மாணவிகளுக்கு வழங்க உதவிடுதல்.
4.
வருங்கால
சமுதாயத்தின் ஓர் அங்கமாகப் போகும் இன்றைய மாணவ,
மாணவிகளை ஒழுக்கத்தோடும், நல்சிந்தனையோடும், பொதுநல
நோக்கோடும் செயல்பட அவர்களுக்குத்
தேவையானவற்றை நயமாக நல்கிடவும், அழகாக அறிவுறுத்திக் கூறவும், அல்வழி போகாதிருக்க நல்வழி காட்டிடவும் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து சக ஆசிரியர்களுடன் ஆசிரியர்களையும் கலந்தாலோசித்து நன்கு
திட்டமிட்டுக்கொள்ளுதல்.
5.
வருங்கால
வலிமையான, சிந்தனை வலிமை மிக்க, திறன்
மிகுந்த, அறிவு வளமிக்க, பொறுப்புள்ள, சமூக அக்கறையுள்ள, இரக்க
குணம் நிரம்பிய, தேவையானவர்களுக்கு உதவியை உரிய நேரத்தில் செய்யும் கருணை உள்ளம்
மிக்க, மிகச்சிறந்த
சமுதாயத்தை உருவாக்க
மாணவ, மாணவிகளைத் தயார்படுத்த வேண்டியது நாமே! நம் பொறுப்பே!! அவற்றைச் செவ்வனே
செய்ய திட்டம் வகுத்துக் கொள்ளுதல்.
6.
இத்தகைய இமாலயப் பணியில் சக ஆசிரியர்களை உரிய வகையில்
தூண்டி, ஆர்வத்தோடு ஈடுபடவும், ஒத்துழைப்பு நல்கிடவும் அவர்களையும் இணைத்துக் கொள்ளுதல்.
7.
தங்களுக்கு
ஒதுக்கப்பட்ட பாடங்களையும், வகுப்பாசிரியர் பொறுப்பையும் செவ்வனே செய்ய
திட்டம் வகுத்துக் கொள்ளுதல்.
8.
முகமறியா நம் கடின உழைப்பால் ஈட்டித் தந்த வெற்றியை பலர்
கொண்டாடிக் கொண்டிருந்தாலும், வருத்தம் மிகப்படாமல், அடுத்த வெற்றிக்கு அடித்தமிட்டுக்
கொண்டிருக்கும் “என் கடன் பணி செய்து கிடப்பதே!” என உழைத்துக் கொண்டிருக்கும் சக ஆசிரியர்களை மனதாரப் பாராட்டுதல்.
9.
ஆறு
முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்குத்
தேவையான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டிற்கான படிவங்கள் மற்றும் பதிவேடுகளைத்
தயார் நிலையில் வைத்துக் கொள்ளுதல்.
10. தமக்கு வழங்கப்பட்ட கால அட்டவணை அதிருப்தி
இருந்தாலும், மாணவ, மாணவியர் நலனைக்
கருத்தில் கொண்டு, ஏற்றுக்கொள்ளுதல்.
11. மாணவ, மாணவியர் நலனைக்
கருத்தில் கொண்டும், மற்றதைப் புறந்தள்ளி தம் பணியில் வெற்றிநடை போடத் தயாராகிக்
கொள்ளுதல்.
12.
வகுப்பறையில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், சென்ற ஆண்டு அரசுப் பொதுத்தேர்வில் மாநில அளவில், மாவட்ட
அளவில், நம் பள்ளி அளவில், முதல்
மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளையும் பாராட்டுதல்.
13.
வகுப்பின் வருகைப்
பதிவேட்டில், இனவாரியாக
மாணவ, மாணவியர் எண்ணிக்கையை குறித்து
வைத்துக்கொள்ளுதல்.
14.
மாற்றுத்திறனாளிகள், தந்தையை இழந்தவர்கள், பெற்றொரை
இழந்தவர்கள்,... போன்றவர்களின் பட்டியலைத் தயாரித்தல்.
15.
சென்ற
ஆண்டுப் பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காடு குறித்து ஆலோசனை செய்து, இவ்வாண்டு அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விழுக்காடு உயர என்ன செய்யலாம் என திட்டம்
தீட்டிக் கொள்ளுதல்.
16.
சாரண
இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம், பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம், நுகர்வோர்
இயக்கம், . . . போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு செவ்வனே செயல்படுதல்.
17.
பள்ளி
விழாக்கள், இலக்கிய மன்றக் கூட்டங்கள், பாட இணைச் செயல்பாடுகள், விளையாட்டு விழாக்கள், ஆண்டு விழா, அறிவியல் கண்காட்சி, பள்ளி
அளவிலான போட்டிகள், . . . போன்றவற்றின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு
நல்கி, வெற்றிகரமாக நடத்த திட்டம்
தீட்டிக்கொள்ளுதல்.
18.
மாணவ, மாணவிகளின் பிறந்த
நாள், பள்ளியில் கொண்டாட வேண்டிய கல்வி
வளர்ச்சி நாள், சுதந்திர தினம், குடியரசு தினம்,
மத நல்லிணக்க நாள், . . . போன்ற முக்கிய நாட்களைப் பட்டியலிட்டுக் கொண்டு, அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்
கூறி, அவற்றைக்
கொண்டாட வழிகாட்ட,
திட்டம் தீட்டிக்கொள்ளுதல்.
19.
நீங்கள் விடுப்பில் செல்ல உள்ளதை, சக ஆசிரியர்களுக்கு
தெரிவித்து, மாணவ, மாணவிகளை வேலை வாங்க அல்லது கற்பிக்க திட்டம் வகுத்துக் கொள்ள உதவிடுதல்.
20.
ஒவ்வொரு
வகுப்பிலும் மாணவ, மாணவிகளை சிறு குழுக்களாகப் பிரித்து, குழுத்தலைவரை நியமிக்கச் செய்து, பட்டியலிடுக் கொள்ளுங்கள்.
CCE செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும்.
21.
மாணவ, மாணவிகளின் குழுக்களுக்கு அழகான பெயர் சூட்டி பட்டியலிட்டு வைத்துக் கொள்ளுதல்.
22.
ஒவ்வொரு
வகுப்பிலும் உள்ள மாணவ, மாணவிகளை தமிழ், ஆங்கிலம் பார்த்து படிக்கவும், வேகமாக வாசிக்கவும், மௌனமாக
வாசிக்கவும் பயிற்சி அளிக்க நன்கு திட்டமிட்டுக் கொள்ளுதல். மாணவர் வாசிக்கத் தொடங்கிவிட்டால்
கல்வி கற்பது எளிமையாகிவிடும்.
23.
ஒவ்வொரு
வகுப்பிலும் உள்ள, மெல்ல கற்கும் மாணவர்கள், தெளிவாகப்
படிக்கத் தெரியாதவர்கள்
பட்டியலையும் தயார் செய்தல்.
24.
அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளை, மீத்திறன் பெற்றோர்,
ஓரளவு கவனம் செலுத்த வேண்டியவர்கள், அதிக கவனம் செலுத்த வேண்டியவர்கள், 100 க்கு
100 எடுக்கத் திறமை பெற்ற சிறப்பு கவனம் செலுத்த வேண்டியவர்கள் என அவர்களைப்
பிரித்து, அவர்களுக்குத் தக்கவாறு கல்வி கற்பிக்கவும், பயிற்சி வழங்கவும் முன்னேற்பாடு
செய்து கொள்ளுதல்.
25.
பாடவாரியான மதிப்பெண் பட்டியலும், தொகுப்பு மதிப்பெண் பட்டியலும், மாணவ, மாணவிகளுக்கு வழங்க மாணவர் தேர்ச்சி
முன்னேற்ற அறிக்கையயும்
தலைமையாசிரியரிடமிருந்து பெறுதல்.
26.
மாணவ, மாணவிகளை கூர்ந்து கவனித்து, அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளைத்
தீர்க்க ஆலோசனை வழங்குதல்.
27.
சென்ற வருடம் நடந்த சுகமான மற்றும் கசப்பான நிகழ்வுகளையும் மீண்டும்
அசைபோட்டு நல்லனவற்றை ஏற்றுக்கொள்ளுதல். அல்லனவற்றைத் தள்ளுதல்.
28.
சக பணியாளர்களின்
பிறந்த நாள், மணநாள் ஆகியவற்றைத் திரட்டி
வைத்துக்கொண்டு, அந்நாட்களில் அவர்களை வாழ்த்த
மறக்காதீர்கள்.
29.
சக ஆசிரியர்களிடமும், மாணவ, மாணவிகளிடமும் மனம் விட்டுப்
பேசி பள்ளிச் சூழலை கலகலப்பாக்கிக் கொண்டால், எல்லா பணியும், முழுமையாகவும், நிறைவாகவும்
வெற்றியடையும்.
30.
சமுதாய அவலங்களைச் சீர்செய்யவும், சமதர்ம
சமுதாயத்தை உருவாக்கவும், மனிதாபிமான சமுதாயம் மலரச்செய்யவும் நல்ல உள்ளங்களை உருவாக்க
வேண்டிய செயலை நாமே
முன்னின்று செயல்படுத்துவோம். வாருங்கள்! வெற்றி நமதே!! வாழ்க
ஆசிரியரினம்!!!
Listed By Mr. S. Ravikumar,
B.T. Asst., GHS., Arangaldurgam, Ph: 9994453649
அருமையான் கட்டுரை!
ReplyDeleteSimply superb!
ReplyDeleteமிக்க நன்றி. நாம் இந்த முப்பதை செயற்படுத்த வேண்டும்; பாட குறிப்பேட்டினை எழுத வேண்டுமா? வேணாமா? என்ன எழுத வேண்டும். புத்தக்த்தில் உள்ளதை அப்படியே எழுதனுமா? எங்கள் நர்சரிக்கு தேவையா
ReplyDeleteசிறப்பான ஆலோசனைகளை வழங்கிய தங்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் இந்த நடைமுறையை பின்பற்றி நடப்போம். நல்லதை சொல்ல தைரியம் வேண்டும், அதைவிட அதை கடைபிடிக்க கூடுதல் தைரியம் வேண்டும். என்னிடம் கூடுதல் தைரியம் உள்ளது.
ReplyDeleteக.செல்வவிநாயகம்,
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)
விருத்தாசலம்