மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான சென்டாக் சேர்க்கைக்கு, 6765 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
இந்த ஆண்டு சென்டாக் கன்வீனராக அரசு மருத்துவக் கல்லூரி
இயக்குனர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்டாக் குழுவினர்,
விண்ணப்பங்கள் வினியோகம், தரவரிசைப் பட்டியல் தயாரிப்பது போன்ற பணிகளில்
தீவிரமாக உள்ளனர்.
கடந்தாண்டு, பல்வேறு மையங்களில் சென்டாக் விண்ணப்பங்கள்
விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்டாக்
அலுவலகத்தில் பெறப்பட்டன. மாணவர்கள் மற்றும் பெற்றோர் அலைகழிக்கப்படாமல்,
அவர்களது சிரமத்தை குறைக்கும் வகையில், "ஆன்-லைன்" மூலம் விண்ணப்பிக்கும்
முறை இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த மாதம் 16ம் தேதி முதல், சென்டாக் இணையதளத்தில்
விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன. சென்டாக் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தில்
தகவல்களைப் பூர்த்தி செய்து, மாணவ மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.
மேலும், இணைய விண்ணப்பத்துடன், சான்றொப்பம் இடப்பட்ட நகல்
சான்றிதழ்களை இணைத்து, சென்டாக் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என,
அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
கடந்த 30ம் தேதி வரை, இணையதளத்தில் விண்ணப்பங்கள்
வழங்கப்பட்டன. இணைய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அனுப்ப வேண்டிய கடைசி
தேதி, ஜூன் 10ம் தேதியாகும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி
முடிந்துவிட்ட நிலையில், புதுச்சேரி முழுவதும் இருந்து 6250 மாணவ மாணவிகள்
விண்ணப்பித்துள்ளனர்.
வெளி மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 515 விண்ணப்பங்கள் வந்துள்ளன. மொத்தம் 6765 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்தாண்டு, புதுச்சேரி மாணவ மாணவிகள் 6112 பேர், வெளிமாநிலங்களுக்கான இடங்களுக்கு 925 பேர், என மொத்தம் 7037 பேர் விண்ணப்பித் திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு, புதுச்சேரி மாணவ மாணவிகள் 6112 பேர், வெளிமாநிலங்களுக்கான இடங்களுக்கு 925 பேர், என மொத்தம் 7037 பேர் விண்ணப்பித் திருந்தது குறிப்பிடத்தக்கது.
கவுன்சிலிங் எப்போது விண்ணப்பங்களை பாட வாரியாகவும், இட
ஒதுக்கீடு அடிப்படையிலும் பிரித்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி,
சென்டாக் அலுவலகத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதனடிப்படையில்,
தகுதிப் பட்டியல், விரைவில் வெளியிடப்பட உள்ளது.
மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு குறித்த
வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இது தொடர்பான தீர்ப்பு, ஜூலை
முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது. இதற்குப் பிறகே, சென்டாக்
கவுன்சிலிங் தேதி குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...