Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தங்கம் வாங்க போறீங்களா..? - எச்சரிக்கை அவசியம்...


         Shoppers Beware - இப்பொழுதெல்லாம் ஒரு பெரிய ஃபேஷன் அக்க்ஷையை திருத்திகை அன்று பொட்டு தங்கமாய் வாங்க வேன்டும் என்று நம்பும் மக்களுக்கு - இந்த கோல்ட் அல்லது சில்வர் காயினுக்கு ஆசைபட்டு முதலுக்கு மோசம் கதை தான் இங்கு தமிழ் நாட்டில் நடக்கிறது. 

         இரண்டு ரூவாய்க்கு வெத்திலை வாங்கினால் நம்மளுங்க பார்த்து இளம் வெத்தலை வேனும்னு  கில்லி கில்லி பார்த்து மற்றூம் இருபது ரூபாய்க்கு வாங்கும் வெண்டைக்காயை இளசா வேனும்னு நுனியை ஒடிச்சு ஒடிச்சு வாங்கும் நாம், அந்த அன்றாடகாச்சியை உண்டு இல்லை என ஆக்கி ஒரு வெற்றி சிரிப்புடன்  வீட்டுக்கு வந்து அந்த புரானத்தை எபிஸொடு எபிஸொடாக ஸ்பான்ஸ்ர்ஸிப் இல்லாமல் எல்லொரிடம் சொல்லி பீத்திப்போம் ஆனால் கிடைக்கும் இந்த அல்ப வெள்ளி தங்க வெள்ளி காயினுக்கு அடிமை ஆகி முதலுக்கே மோசமாகி  லட்சகணக்கில் ஏமாறுகிறோம். சரி கிடைத்த காயினாவது நல்லதா என டெஸ்ட் செய்யுங்கள் 50 - 60% டூப்ளிகேட் காயின்கள் தான். முக்கால் வாசி வெள்ளி காயினள் - அலுமினியத்தில செய்ய பட்டு வெள்ளி முலாம் பூசபடுகிறது. அதே மாதிரி தங்க காயின்களும் லஷ்மி படம் போட்டு அம்பாள் பூசாரி கனக்கா சாமி படத்தில் ஒத்தி எடுத்து கொடுத்த உடன் நாம் மதி மயங்கி அப்படியே பூஜை ரூமில் அல்ல்து லாக்க்ரில பதுக்கி வைப்போம். அரை கிராம், ஒரு கிராம் இரண்டு கிராம் வரை நாம் அதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. என்றாவது அந்த காயினை எடுத்து நகை கடையில் கொடுத்தால் தான் நமக்கு சொல்லுவார்கள் சார் இது உண்மையான வெள்ளி தங்கமில்லை என்று. இவர்களின் மெயின் டார்கெட் புதிதாக முளைத்து இருக்கும் நவீன ஃபிராடு கல்ச்சர் - "அக்ஷய திருதி" இது நகை கடைக்காரகளின் நவின பிராட் ஆகும்.
 

                அந்த ஒரு நாள் மட்டும் நம் வாழ்க்கையின் தரம் உயர்ந்து விடாதா என தங்கம் வாங்க வழியில்லாதவர்கள் கூட எப்படியாவது ஒரு கிராம் இரண்டு கிராம் என அவர்களின் சுளையாக பணத்தை கொடுத்து இந்த மாதிரி காயினை வாங்கி  ஜை அறையில் வைத்து என்றாவ்து அதை மாற்ற நினைக்கும் போது அந்த குட்டு  வெளிப்படும். த்ங்க காயின் பிராடுகள் நான் கீழே இனைத்துள்ள தங்க காயின் டிசைந்தான் ஒரிஜினில் டூப்ளிகேட் - இந்த சாமி படம் தவிர வேறு எந்த டீடெய்லும் இருக்காது. இது இவர்கள் மட்டுமல்ல ஐ சி ஐ சி ஐ, ரிலயன்ஸ் மற்றும் பெரிய தங்க வியாபரிகளும் இந்த ஏமாற்று வேலையில் பங்குண்டு. 

         உங்களூக்கு ஒருத்தர் வெள்ளீ அல்லது கோல்டு காயின் கிஃப்டாக கொடுத்தால் தயவு செய்து நீங்கும் வாங்கும் எந்த ஒரு பொருளுக்கும் அன்றைய தங்க வெள்ளி விலையில தயங்காமல் தள்ளூபடி செய்து பாக்கி பணம் பெற்று கொண்டால் அவர்கள் தான் உண்மையானவர்கள். ஆனால் 90 % வெள்ளீ மற்றும் கோல்டு காயின் கிப்டாக கொடுப்பவர்கள் வேண்டுமென்றால் கிப்ட் வாங்கி கொள்ளுங்கள் நாங்கள் உங்கள் விலையில் குறைக்க முடியாது என்று சொன்னால் தயவு செய்து அந்த பக்கம் கூட தலை வைத்து படுக்கதீர்கள் இந்த அரை, ஒன்னு, இரண்டு கிராமுக்கு கூட உண்மை இல்லாத இவர்கள் எப்ப்டி உங்கள் லட்ச கனக்காம பர்சேஸ்க்கு உண்மையாக இருப்பார்கள். 

           சரி இப்படியே இந்த தங்க ப்ர்சேஸ் பற்றியும் பார்த்து விடலாம் கோல்ட் காயின் எவ்வளவு இருந்தாலும் ஆத்திர அவசரத்திற்க்கு வங்கியில் அடகுவைக்கமுடியாது இதற்க்கு மூனு காரணம்,1.வருமானம் அதிகம், 2. அடுத்தவரை பார்த்து கொண்டாடும் ஸ்டையில் 3. தவறாக சம்பாதித்த பணம் இது மூன்றும் இந்த அக்க்ஷையை திருத்திகை பண்டிகையை டோட்டலாக மாற்றியது. மேல் கூறிய பர்சேஸ் போக புது அப்ளையன்ஸஸ் மற்றூம் புது நகை ப்ர்சேஸ் இன்றியமையானது. நகை வாங்கும் கலை ஏனோ சில பரம்பரை ஷாப்பிங் ஜித்தர்களுக்கு மட்டுமே எளிதாகிறது, மற்றவர்களுக்கு மைக்ரேன் வந்தவனை ரோல கோஸ்டரில் ஏற்றி விட்ட கதை தான் - இதை ஏன் கூறுகிறேன் என்றால் நூற்றில் மூன்று சதவிகித பேர்தான்ரோலகோஸ்டரில் ஏறி இறங்கும் வரை சுற்றி என்ன நடக்கிறது என கண் இமைக்காமல் பார்ப்பார்கள், மீது உள்ள 97% சதவிகித மக்கள் ஏறியது தான் தெரியும், அது சுற்றி நிற்கும் வரை கண்ணை திறக்கவே மாட்டார்கள். அந்த கதை தான் நகை விற்கும் கடைகளின் அலிபாபா குகை எக்ஸ்பீரியன்ஸ். தங்கம் என்னை பொறுத்த வரை நிறைய பேர் டிசைனுக்கு கொடுக்கும் இம்பார்டன்ஸ் அதன் தரம், அதன் உண்மையான வேல்யு பற்றி கவலை படாமல் குருட்டாம் போக்கில் வாங்குகின்றனர். 

             கடைக்குள் போன உடனேயே உலகத்தில் எங்கு பவர் கட் இருந்தாலும் இந்த தி நகர் திருட்டு அண்ணாச்சிகள், பாரிமுனை பஜன்லால்கள், புரசை பெர்னான்டோக்கல் ஒரு வசிய சக்தியை நம் மீது தெளித்து பக்ரீத்துக்கு ரெடியாகும் பலி ஆடுகளை போல் நடத்துவார்கள். 

Please CONSIDER THIS FACTS before you purchase. 


 1. தங்கம் 16 கேரட் / 18 கேரட் / 20 கேரட் / 22 கேரட் / 24 கேரட் தரம் பற்றீ நன்கு விசாரித்து வாங்குங்கள். Hall Mark is MUST 

2. மெஷின் கட் வாங்கவே வாங்கதிர்கள் சீக்கிரம் உடைந்து விடும். 

3. குறைந்த வெயிட்டில் பெரிதாக தோன்றும் நகைகள், மற்றூம் தோடு, வளையல்கள் வாங்கவே வாங்காதிர்கள். அத்ற்க்கு உள்ளே மெழுகு, செம்பு,மற்றூம் வெள்ளீ ஃபில்லிங்க் இருக்கும்.
4. கண்டிப்பாக கல் வைத்த நகைகளை வாங்க வேண்டாம், வாங்கினால் 30 - 45%
உங்கள் பணம் பச்சா.

5.தயவு செய்து ஒயிட் மெட்டல் நகைகளை தெரியாத கடைகளிடம் வாங்கவே வேண்டாம். பாதி ஒயிட் மெட்டல் நகைகள் ஒரிஜினல் அல்ல.

6. சிங்கப்பூர், மலேஷியா, துபாய் மற்றூம் நிறைய நாடுகளில் தங்கத்தின் விலையை வெளியே போர்ட்டு போட்டிருப்பார்கள். அந்த விலை மற்றும் எவ்வளவி கிராமோ அவ்வளுவுதான் விலை, நம்மூர் கொள்ளை ஃபார்முலா கிடையாது, இங்குதான் செய்கூலி / சேதாரம் / கல் சார்ஜ் அப்புறம் லொட்டு லொசுக்கு இத்யதி  இத்யாதி போட்டு தங்கத்தின் விலையில் 30 - 45% எக்ஸ்ட்ரா போட்டு ஒரு ஜெர்க் கொடுத்து உங்களுக்கு ஆபத்பாந்தவர் போல சரி பில் போட்டா இன்னும் காஸ்ட்லி என்று புருடா விட்டு 70% நகைகள் பில் இல்லாமல் தான் விற்பனை ஆகிறது.இதனால் விற்க அல்லது மாற்ற செல்லும் போது இன்னுமொரு 30 - 40% லாஸ். 916, கேடி எம், கடை சீல் எனும் அல்வாவை கண்டிப்பாக நம்பவேண்டாம், ஆக மொத்தம் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பத்தாயிர ரூபாய்க்கு மூனாயிரம் தான் ஹேன்ட் இன் வேல்யு. 

               சோ கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆனாலும் பராவயில்லை தயவு செய்து பிராப்பர் பில்லை வாங்குங்கள் அப்படி செய்யும் பட்சத்தில் அந்த நகை தரம் குறைந்தால், இல்லை உடந்தாலோ அல்லது கலப்படம் இருந்தாலோ அவர்கள் உங்களுக்கும் அன்றைய தேதிக்கு முழு பணமோ அல்லது தங்கமோ தர  வேண்டும் இல்லையென்றால் நீங்கள் கன்ஸுமர் கோர்ட்டுக்கு சென்றால் அவர்கள் நஷ்ட ஈடு தந்தே ஆகவேன்டும். வெள்ளை பேப்பரில் அல்லது ரப்பர் ஸ்டாம்பில் பில் போட்டு கொடுத்தால் கண்டிப்பக வாங்க வேண்டாம். ஆஸ் இஸ் (AS IS) என போட்டு கொடுத்தாலும் வாங்க வேண்டாம்.தங்கம் வாங்குவது ஒரு நல்ல சேமிப்பு ஆனால் பார்த்து வாங்கி உங்கள் முழு வேல்யு இருக்குமாரு பார்த்து கொள்ளுங்கள்.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive