பள்ளிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் மூலம்
ஆசிரியர்கள் விரும்புகிற இடங்களுக்கு பணிமாறுதல் பெற்றுக் கொள்ளலாம் என
பள்ளிக் கல்வி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
வைகைச்செல்வன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை
சட்டபேரவை தொகுதிக்குபட்ட இ.முத்துலிங்காபுரத்தில் இன்று விலையில்லா
பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
அமைச்சர் பேசியதாவது:
பெண்களின் சிரமங்களையும், துயரங்களையும் தாயுள்ளத்தோடு உணர்ந்து அறிந்துதான் விலையில்லா பொருள்களான மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்தார். கடந்த ஆட்சியில் நிதிநிலைமை மோசமான நிலையில் விட்டுச் சென்றனர். ஆனால், முதல்வர் பொறுப்பேற்ற இரண்டாண்டுக்கு உள்ளாகவே நிதி நிலையை போக்கி, ஏழை மக்கள் அனைவரும் நலமாக இருப்பதற்காக 20 மணிநேரம் பணியாற்றி பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
சமூக விடுதலை என்பது பெரும் பொருள் இருப்பதால் மட்டும் ஏற்பட்டு விடாது. அரசு பணிகளில் உயர் பதவிகளை வகிக்கும் போது தான் சமூகம் உங்களை மதிக்கிறது. அப்போது சமூக விடுதலை என்பது தானக வந்து விடுகிறது. அதற்காக பள்ளிக் கல்விக்காக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 16875 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். அதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பொருள்களான நோட்டு புத்தகங்கள், சீருடைகள், மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல், கிராமங்களில் பொருளாதாரம் முன்னேறினால் தான் நாடு வளரும் என்பதை அறி்ந்து, கறவை மாடு மற்றும் ஆடுகளை கிராம மக்களுக்கு வழங்குகிறார். தற்போது, பள்ளிகளில் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் விரும்புகிற இடங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், கிராமங்களில் அரசு பள்ளிகளில் ஏழை, எளிய மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் அதிகம் சேர்ப்பதற்கு முன்வர வேண்டும். எனவே அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி இலக்கை அடைவதற்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் கடுமையாக முயற்சிக்க வேண்டும்.
தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினி திட்டத்தை, வாக்குறுதியாக அளித்து உத்திரபிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் தேர்தலில் ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதனால், ஒரு திட்டத்துக்கே வெற்றி என்றால் இந்தியா முழுவதும் இது போல் திட்டங்கள் செயல்படுத்தினால் வளமான பாரதம் உருவாகும். அதனால் விலையில்லா பொருள்கள் பெற்ற அனைத்து பயனாளிகளும் உபயோகிக்கும் போது முதல்வரை நினைத்துபார்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார். இதேபோல், பாப்பாகுடி, மேட்டுப்பட்டி, கொண்டாலபுதூர், பெத்துரெட்டிபட்டி, போத்திரெட்டிபட்டி மற்றும் உப்பத்தூர் ஆகிய கிராமங்களிலும் விலையில்லா பொருள்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகாசி கோட்டாட்சியர் ரெங்கன், ஒன்றியக் குழு தலைவர் வேலாயுதம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாலமுருகன், வட்டார ஊராட்சி உறுப்பினர் மாரியப்பன், ஊராட்சி தலைவர் மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...