உலக பொது சுகாதாரப் பள்ளி, ஜிப்மர் மருத்துவமனையில், துவக்கப்படுகிறது. இது குறித்து, ஜிப்மர் இயக்குனர், ரவிக்குமார் கூறியதாவது:
புதிய பள்ளிக்கான கட்டடம் மற்றும் உள்கட்டமைப்பு, 150 கோடி ரூபாய்
செலவில் அமைக்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., படிப்பை, அடிப்படை கல்வியாக
கொண்டு, எம்.பி.எச்., படிப்பில், மாணவ, மாணவியர் சேர்க்கப்படுவர்.
கல்வி, ஆய்வு மற்றும் செய்முறை என, படிப்பும் பயிற்சியும் இரண்டு
ஆண்டுக்கு, வகைப்படுத்தப்படும். பொது சுகாதாரக் கல்வி பயிலும் மாணவ,
மாணவியருக்கு, அமெரிக்க பேராசிரியர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள முக்கிய
மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், பயிற்சி அளிப்பர்.
சமூகத்தில் நிலவும் பருவ நிலை நோய், ஊட்டச்சத்து குறைபாடு, தொற்று நோய்,
மக்களிடையே பரவும் கிருமி நோய்கள் பற்றி, விரிவாக கற்றுக்கொள்ள வாய்ப்பு
ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு, கடந்த 2ம் தேதி, நடந்தது.
விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது. தேர்வு முடிவு, இந்த வார
இறுதியில் வெளியாகும் என, ஜிப்மர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...