பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை, பாடம்
வாரியாக ஆய்வு செய்யும்போது, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி விகிதம்
உயர்ந்துள்ளது; சமூக அறிவியல் பாடத்தில் மட்டும் தேர்ச்சி விகிதம், 3.51
சதவீதம் சரிவடைந்துள்ளது தெரியவருகிறது.
கடந்தாண்டு ஆங்கில பாடத்தை 30,058 பேர் எழுதி, 27,173 பேர்
தேர்ச்சி பெற்றனர்; தேர்ச்சி 90.40 சதவீதமாக இருந்தது. தற்போது, 28,978
பேர் ஆங்கிலத்தேர்வை எதிர்கொண்டு, 27,321 பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர்;
கடந்தாண்டை விட, 3.88 சதவீதம் அதிகரித்து, ஆங்கில பாட தேர்ச்சி 94.28
சதவீதமாக உள்ளது.
கணித பாடத்தை கடந்தாண்டு 30,097 மாணவர்கள் எதிர்கொண்டதில்,
26,173 பேர் தேர்ச்சி பெற்றனர்; தேர்ச்சி 86.96 சதவீதமாக இருந்தது.
தற்போது, இப்பாடத்தை எதிர்கொண்ட 29,017 மாணவர்களில், 28,530 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்; மற்ற பாடங்களை விட, அதிகமாக, கடந்தாண்டை விட 11.36 சதவீதம்
அதிகரித்து, கணித பாட தேர்ச்சி 98.32 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்தாண்டு அறிவியல் பாடத்தை 30,031 பேர் எதிர்கொண்டு,
27,178 பேர் தேர்ச்சி பெற்றதையடுத்து, தேர்ச்சி 90.50 சதவீதமாக இருந்தது;
தற்போது, இப்பாடத்தை 29,015 பேர் எதிர்கொண்டு, 27,519 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்; கடந்தாண்டை விட, 4.34 சதவீதம் அதிகரித்து, அறிவியல் பாட
தேர்ச்சி, 94.84 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சமூக அறிவியல் பாடத்தை கடந்தாண்டு 30,031 மாணவர்கள்
எதிர்கொண்டு, 29,871 பேர் தேர்ச்சி பெற்றனர்; தேர்ச்சி 99.47 சதவீதமாக
இருந்தது. தற்போது, இப்பாடத்தை 29,011 மாணவர்கள் எதிர்கொண்டு, 27,837 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் எல்லாம்,
தேர்ச்சி சதவீதம்உயர்ந்துள்ள நிலையில், கடந்தாண்டை ஒப்பிடும்போது,
இந்தாண்டு சமூக அறிவியலில் மட்டும் தேர்ச்சி 3.51 சதவீதம் சரிந்து, 95.95
சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்தாண்டை விட, 11.36 சதவீத தேர்ச்சி அதிகரித்து, மாவட்ட
தேர்ச்சியை உயர்த்த கணித பாடம் கை கொடுத்துள்ளது. தமிழ், ஆங்கிலம்,அறிவியல்
பாடங்களும் தேர்ச்சி உயர்வுக்கு உந்துதலாக இருந்துள்ளன. ஆனால், சமூக
அறிவியல் பாடம் மட்டும் 3.51 சதவீத தேர்ச்சி குறைந்துள்ளது. இல்லையெனில்,
மாவட்ட தேர்ச்சி விகிதம் மேலும் அதிகரித்திருக்கும்.
but the school results shown that the most fails in tamil subject
ReplyDelete