அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, சீருடை வழங்க, 6.52 கோடி மீட்டர் துணி
தயாரிக்க, விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு, உத்தரவு வழங்கப்பட்டு
உள்ளது.
சங்கங்கள், சங்க உறுப்பினர்களிடம், மூலப்பொருட்களைக் கொடுத்து, துணியாக
தயாரிக்கின்றன. அந்த துணியை, கோ-ஆப்டெக்ஸ் வாங்கிக்கொள்கிறது. அதில், அரசு
வழங்கும், இலவச வேட்டி, சேலை, பள்ளி குழந்தை களுக்கான சீருடைகள்
தயாரிக்கப்படுகின்றன.
கடந்தாண்டு முதல், சத்துணவு திட்டத்தில் இணைந்துள்ள, ஒன்று முதல் 8ம்
வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஆண்டுக்கு, நான்கு செட்
சீருடைகள் வழங்கப்படுகிறது. இதனால், விசைத்தறி நெசவாளர்கள், துணி பதனிடும்
தொழிலாளர்களுக்கு, ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
தற்போது, நடப்பு மற்றும் அடுத்த கல்வியாண்டுக்கான முதல் செட் சீருடைகள்
தயாரிக்கும் பணிகள் துவங்கி உள்ளன.ஒதுக்கீடுஅதற்காக, 1.36 கோடி மீட்டர்
பேன்ட், 1.6 கோடி மீட்டர் பாவாடை, 84 லட்சம் மீட்டர் சல்வர் கம்மீஸ், 2.72
கோடி மீட்டர் சர்ட் என, மொத்தமாக, 6.52 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்ய,
218.86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கைத்தறி மற்றும் விற்பனை துறை அதிகாரி கூறியதாவது: பள்ளி மாணவ,
மாணவியருக்கு, சமூக நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை, ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் துறைகள் மூலம் சீருடைகள் வழங்கப்படுகின்றன.
நடப்பு கல்வி ஆண்டுக்கும், அடுத்த கல்வியாண்டில் முதல்கட்டமாக
வழங்குவதற்கும் சேர்த்து சீருடைகள் தயாரிக்கப்படுகிறது. மொத்த துணி, நான்கு
கட்டமாக, வரும் செப்., 30ம் தேதிக்குள் முடிக்கப்படும். இப்பணியில், 7,000
விசைத்தறிகள் ஈடுபட்டு உள்ளன. இவ்வாறு, அதிகாரி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...