காரைக்குடியில், உண்டு, உறைவிடப் பள்ளிக்கு
கட்டமைப்பு வசதி இல்லை என்ற காரணத்தால், மூடப்பட்டது. அங்கு படித்த
குழந்தைகள், பள்ளியை விட்டு செல்ல மறுத்தனர்.
காரைக்குடி கழனிவாசல் பாண்டியன் நகரில், "மதுரை
ஒளிக்கதிர் கிராமப்புற சேவை அறக்கட்டளை" சார்பில், உண்டு உறைவிடப் பள்ளி,
கடந்த ஆண்டு ஜூன் முதல், இயங்கியது. நரிக்குறவர், நேபாள கூர்க்காக்களின்
குழந்தைகள் 18 பேர், தங்கி பயின்றனர்.
இந்நிலையில், கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதால், பள்ளியை மூட, கல்வித்துறை உத்தரவிட்டது. கோடை விடுமுறை முடிந்து, நேற்று, பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு, தடை குறித்து அறிவிக்கப்பட்டது. குழந்தைகள், "வேறு பள்ளிக்கு செல்லமாட்டோம்" என, அடம்பிடித்தனர்.
மாணவி ஸ்ரீதேவி, 12, கூறுகையில், "என்னுடைய பெற்றோர், ஊசி, பாசி விற்கின்றனர். நான், தங்கைகள் புவனேஸ்வரி, முருகேஸ்வரி, தம்பி தினேஷ், இங்கு படிக்கிறோம். நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில், பள்ளி உள்ளதால், முதலில் அங்கு படிக்க அனுப்பினர். திருவிழா காலங்களில், பெற்றோர், எங்களை பிரிந்து விடுவர்.
அந்த நேரங்களில், பள்ளிதான் எங்களுக்கு வீடாக இருந்தது. பள்ளி மூடப்பட்டது தெரிந்தால், எங்களையும் பாசி விற்க அழைத்துச் சென்று விடுவர். இனி, படிக்க வாய்ப்பு இல்லை" என்றார்.
ஒளிக்கதிர் கிராமப்புற சேவை அறக்கட்டளை பொறுப்பாளர் ஜெயலட்சுமி கூறுகையில், "இடவசதி போதவில்லை என, பள்ளியை மூட உத்தரவிட்டுள்ளனர். இன்று வந்த குழந்தைகளுக்கு, மதிய சாப்பாடு கொடுத்து அனுப்பி விட்டோம். அரசுப் பள்ளியில் சேர்த்து விட தீர்மானித்துள்ளோம். பள்ளி மூடப்படுவதால், குழந்தைகள் நிலை பரிதாபமாக உள்ளது" என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...