அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில்
என்.ஆர்.ஐ. மாணவர்களுக்கன இடங்கள் குறைவாக இருப்பதாக அறிவித்ததால்
குழப்பம் நிலவியது.
இதனால் பெற்றோர்களுக்கும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கும்
இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர்
கூறியதாவது, "கடந்த ஆண்டு என்.ஆர்.ஐ. இட ஒதுக்கீட்டின் கீழ் 325 இடங்கள்
ஒதுக்கப்பட்டன். எனவே இந்த ஆண்டும் அதே அளவு இடம் கிடைக்கும் என்ற
எதிர்பார்ப்புடன் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தோம். ஆனால் தற்பொழுது 146
இடங்கள் மட்டுமே உண்டு என்கின்றனர். இது பற்றி தெளிவான அறிவிப்பை அண்ணா
பல்கலை முன்னதாக வெளியிடாமல் தற்பொழுதுதான் கூறுகின்றனர். எதிர்பார்ப்புடன்
வந்தோம். ஏமாற்றத்துடன் திரும்புகிறோம்" என்றனர்.
இது குறித்து பல்கலைக்கழக அலுவலர்கள் கூறியதாவது,
என்.ஆர்.ஐ. இட ஒதுக்கீட்டில் 146 இடங்கள் மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று
பிப்ரவரி மாதமே நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எனவே அதன் படிதான்
இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 60 வெளிநாட்டினருக்கான இடங்களுக்கு இது
வரை 33 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்திருக்கிறார்கள். எனவே மீதி இடங்கள்
என்.ஆர்.ஐ. மாணவர்களுக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்." என்றனர்.
ஏற்கனவே விளையாட்டு பிரிவில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள
நிலையில், தற்பொழுது என்.ஆர்.ஐ. இட ஒதுக்கீட்டிலும் குழப்பங்கள்
ஏற்பட்டிருக்கிறது. பொறியியல் கலந்தாய்விற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து
வரும் அண்ணா பல்கலை., பெரும் எதிர்பார்ப்புடன் வரும் பெற்றோரையும்,
ஆவலுடன் வரும் மாணவர் மனதில் ஏமாற்றமும் ஏற்படாத வகையில், முன்னதாகவே
தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...