கட்டுரையாசிரியர் திரு. எஸ். ரவிக்குமார் அவர்கள் நமது பாடசாலை வலைதளத்திற்காக வழங்கிய முந்தைய கட்டுரை - வாசகர்களின் மறு பார்வைக்காக.
(இக்கட்டுரை எந்த காரணம் கொண்டும் தனியார் பள்ளியை குறை கூறுவதாக அமையாமல், அரசு பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளும், அவர்கள் சந்திக்கும் சவால்களும், அவர்களின் நிறை குறைகளை உலகிற்கு படம் பிடித்து காட்டும் வகையில் மட்டுமே அமைந்து உள்ளது.)
அரசு பள்ளி மாணவர்களின் சூழ்நிலை:
- மாணவ, மாணவிகள் படிப்பதற்கு எந்நேரமும் உகந்ததாக இல்லாத சூழ்நிலை
- அரசுப்பள்ளியையும், ஆசிரியர்களையும் மட்டுமே முழுமையாக நம்பும் பெற்றோர்
- தேவையான நோட்டு புத்தகங்களை வாங்கி தர இயலாத ஏழ்மையான பெற்றோர்.
- கல்வியறிவு இல்லாத பெற்றோர்.
- ஒரு வகுப்பில் உள்ள அளவுக்கு அதிகமான மாணவ, மாணவிகள் (ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக).
- பல ஆண்டுகளாக ஆசிரியர் இன்றி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள்.
- பள்ளியில் சேர எப்பொழுது வந்தாலும், அவர்களை அரசு பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- அவர்களை வரவேற்று சேர்த்துக் கொண்டு, எவ்வளவு குறுகிய காலமானாலும், அவர்களுக்கு தேவையானதைக் கற்பித்து, அவர்களையும் தேர்ச்சி பெற உழைக்கும் ஆசிரியர்கள்.
- கற்றலில் பின் தங்கியவர்களை அதிகமாகக் கொண்ட பள்ளிகள்.
- கற்றலில் பின் தங்கியவர்களையும், பள்ளியை விட்டு இடையில் நின்றவர்களையும் பள்ளிக்கு வரவழைத்து அவர்கள் வெற்றிக்கு அயராது பாடுபடுபவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள்.
- தவறு செய்யும் மாணவ, மாணவிகளையோ, பள்ளிக்கு அடிக்கடி வராத மாணவ, மாணவிகளையோ, ஒழுங்காகப் படிக்காத மாணவ, மாணவிகளையோ எதுவும் கண்டித்து கேட்கக் கூட உரிமை இல்லாதவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள்.
- அத்தகைய மாணவ, மாணவிகளைப் பக்குவமாக அரவணைத்து, கடினமான சூழ்நிலையையும் எளிமையாகக் கையாண்டு அவர்கள் வெற்றிக்கு அயராது உழைக்கும் ஆசிரியர்கள்.
- குறைவான தேர்ச்சி.
- பெரும்பாலான மாணவ, மாணவிகளை, அவர்கள் குடும்பத்திலேயே முதல் பட்டதாரிகளாக்க அசராது பாடுபடும் ஆசிரியர்கள்.
- மாணவ, மாணவியர் வீட்டுக்கு வந்ததும், பள்ளியில் படித்தது போதும், இருக்கிற வேலையைப் பார் எனக் கூறும் பெற்றோர்.
- தமிழக அரசு பெண்களுக்கு வழங்கும் திருமண உதவி திட்டத்தில் பயன்பெற அவர்களைத் தயார்படுத்துதல்.
- மனப்பாடம் செய்து படிக்காமல், புரிந்துகொண்டு படிக்கும் முறையில் கல்வி கற்பித்தல்.
- எல்லா வகையிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெறவும், கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் அடிப்படைகளை நன்கு அறிந்துகொள்ளும் வகையில் அந்தந்த வகுப்புப் பாடங்களை, அந்தந்த வருடத்தில் நடத்துதல்.
- மாணவ, மாணவிகள் நலனுக்காக, ஏற்கெனவே உள்ள பணிச்சுமையைக் கருத்தில் கொள்ளாமல், ஆசிரியர் இல்லாத பாடத்தையும், அவர்களுக்குப் புரியும் வகையில் கற்பிக்கும் தொண்டுள்ளம் கொண்ட ஆசிரியர்கள்.
- காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளும், வழிகாட்டுதல்கள் வழங்கும் தன்னலமற்ற ஆசிரியர்கள்
அரசு பள்ளி மாணவர்களின் வறுமை நிலை :-
படிக்க
ஆசை இருந்தும், பள்ளியை விட்டு வீட்டுக்குச் சென்றவுடன், தம்பி தங்கைகளுக்கு
இரண்டாவது தாயாகவும், சமையல் உதவியாளராகவும், பெரும்பான்மை கிராம வீடுகளில்
சமையலராகவும் அவதாரமெடுக்கும் மாணவிகள்; சம்பளமில்லா பணியாளாராகவும், பொருளீட்டும்
வேலைக்காரராகவும் மாறும் மாணவர்கள், படிப்பதற்கு
உகந்ததாக இல்லாத சூழ்நிலைக்குத்
தள்ளப்படுகின்றனர்.
பணி
செய்ய வாய்ப்பு கிடைக்காத முன்னாள் மாணவர்களின் பாழாய் போன கிரிக்கெட் ஆடும்
ஆசைக்கு பலியாகும் மாணவர்கள், குடும்ப வருவாயைப் பெருக்க ஓரளவு வேலை செய்யும்
பெண்கள் களைப்பை (!!!!!!!!!!!!!!!!!) மறைக்க தொ(ல்)லைகாட்சி பார்க்கும் ஆசைக்கு பலியாகும்
மாணவிகள்.
சுயநல
ஆசை மற்றும் பிரச்சனைகளால் பிரிந்த பெற்றோரின் அக்கறையின்மை காரணமாக, தாத்தா, பாட்டி, உறவினர் வீட்டிலேயோ, அல்லது பிரிந்த
பெற்றோரின் ஊர்களுக்கு மாறி, மாறி படிக்க வேண்டிய சூழலில் உள்ள மாணவ, மாணவிகள்.
செய்யாத
வீட்டுப்பாடங்கள், குறு, சிறு தேர்வுகளுக்கு படிக்காமை, 2 அல்லது 3 கி.மீ. நடந்து
சென்று பள்ளிக்குச் செல்ல வேண்டுமே என்ற நினைப்பு தரும் களைப்பு, காலையில் வீட்டில்
/ நிலத்தில் செய்த வேலை தந்த அசதி, வீட்டில் நேற்று நடந்த பெற்றோரின் சண்டை தரும்
மன உளைச்சல், ஏழ்மை தரும் அயர்ச்சி, தொலைக்காட்சியில் பார்த்த, கனவிலும் எட்டாத
செல்வச் செழிப்பு, அத்தகைய உயர்வுக்கு நம்மால் செல்ல முடியாது என்ற தாழ்வு
மனப்பான்மை போன்ற பலவித மனப்போராட்டங்களுக்கிடையே பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்குத்
தேவையானவற்றை, அவர்கள் விரும்பும் வகையில், அவர்களுக்குப் புரியும் வகையில் கற்பித்து,
அவர்களையும் பள்ளி இறுதித்தேர்வுகளில் வெற்றியடையச் செய்யும் பள்ளிகளையும், ஆசிரியர்களையும்,
வாழ்த்தி, வணங்கி மகிழ்கிறோம்.
ஒரு
சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்யும் தவறுகளால், ஒட்டு மொத்த அரசுப் பள்ளிகளை செய்தித்தாள்களின்
விலாசல்களாலும், கல்வியாளர்களாக காட்டிக்கொள்ள விரும்பும் சிலரின் விமர்சனங்களாலும்,
அடிப்படை சூழ்நிலைகளைப் புரிந்தும் அதைக் காட்டிக்கொள்ளாமல் செய்யும் சிலரின் வாதங்களாலும்,
எதையும் எளிதில் நம்பிவிடும் பொதுமக்களின் தூற்றுதல்களாலும் எல்லா வகையிலும்,
எல்லோராலும் புண்படுத்தப்பட்டும், கையறு நிலையிலும், எதைப் பற்றியும் கவலைப்
படாமல், ”போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கே!”
என முகம் தெரியாது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்தி, வணங்கி
மகிழ்கிறோம்.
ஏழை
மாணவ, மாணவிகளுக்கு, பிரதிபலன் எதிர்பாராமல் பொருளுதவி நல்கியும், ஊக்குவித்தும்,
நல்வழி காட்டி, அவர்களின் முன்னேற்றத்திற்காகவே – மெழுகுவர்த்தி போல் – அயராது பாடுபடும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்தி, வணங்கி
மகிழ்கிறோம்.
வசதியின்றி,
வாய்ப்பின்றி, வழி தெரியாமல் தவிக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையானதைக் கொடுத்து
அவர்களையும் வாழ்வில் வெற்றி பெற வழிகாட்டும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்தி,
வணங்கி மகிழ்கிறோம்.
போக்குவரத்து
இல்லாத கிராமத்திலுள்ள பள்ளிகளில் பணி புரிந்து, நகர்ப்புறம் பற்றி அறியாத மாணவ, மாணவிகளுக்குத்
தேவையான அனைத்தையும் கொடுத்து அவர்களையும் வாழ்வில் முன்னேற்றி, வெற்றி பெற
வழிகாட்டும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்தி, வணங்கி மகிழ்கிறோம்.
சுற்றுச்சுவர்
இல்லாத, கேட் போடப்படாத, கேட் இருந்தாலும் எப்போதுமே திறந்திருக்கும் பள்ளிகளில், படிப்பறிவு
இல்லாத பெற்றோரின் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி, நவீன இந்தியாவை,
வலிமையான இந்தியாவை, பெருமைமிகு இந்தியாவை உருவாக்கக் காத்திருக்கும் மாணவ, மாணவிகளுக்குத்
தேவையான கல்வியையும், ஊக்கத்தையும், வழிகாட்டுதல்களையும், அன்பையும்,
அரவணைப்பையும் வழங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்தி, வணங்கி
மகிழ்கிறோம்.
இவ்வாறு காலை, மாலை வேளைகளில் சிறப்பு வகுப்பு, சனி, ஞாயிறு போன்ற கிழமைகளில் கூட முழு நேர சிறப்பு வகுப்பு நடத்தி பல அரசு பள்ளி ஆசிரியர்கள் தன்னலமின்றி உழைக்கிறார்கள்.
திரவ பொருளான பாலையும், திட பொருளான பழத்தையும் எவ்வாறு ஒரு தராசில் வைத்து அளவிட முடியாதோ அதே போன்று இரு வேறு சூழ்நிலைகளில் இருந்து வரக்கூடிய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் தனியார் பள்ளிகளையும் அரசு பள்ளிகளையும் ஒரு தராசில் வைத்து மதிப்பீடு செய்யாதீர்கள். இருவருமே அவரவர் மாணவர் சூழ்நிலைக்கேற்ப கற்பித்தல் எனும் உன்னத சேவையில் ஈடுபடுகிறோம்.
இப்படிக்கு ஒரு அரசு பள்ளி ஆசிரியர் - திரு. S. ரவி குமார்.
your article is excellent . keep it up .
ReplyDeleteThanks to padasalai behalf off Govt Teachers
ReplyDeleteRavi Kumar Sir, I am very proud to be a Govt School Teacher. I am motivated by your article. Thanks to you and Padasalai.
ReplyDeleteஆசிரியர் சமூகமே,
ReplyDeleteCEO , DEO , DEEO , AEO , உட்பட எந்த அதிகாரி வந்து Meeting வெச்சாலும் குறை, நிறைகளை சொல்லாமல் கம்முனு உக்காந்து இருக்கறது. ஆனா CRC Training ல பாவப்பட்ட BRT ங்க கிட்ட மட்டும் - அது எப்படி சொல்லலாம்?, அரசு பள்ளிகள்ள நாங்க படற கஷ்டம் உங்களுக்கு எங்க தெரியும்? அப்படின்னு ஓவரா Sound உடறது. ஏன்னா அவங்க மட்டும் தான் ஐயோ பாவமா எல்லாத்தையும் கேட்டுகிறாங்க!
இந்த கட்டுரை நமக்காக, நம்ம ஆசிரியர்களால் தரப்பட்டு இருக்குது . இங்க சொல்லுங்கப்பா உங்க குறை, நிறை, கஷ்டம், நஷ்டம், அழுகை, சந்தோஷம், எல்லாத்தையும். இங்க Comment Box ல போடுங்கப்பா. தமிழ் நாடு முழுக்க இருக்கற ஆசிரியர்களும், கல்வியாளர்களும், தெரிஞ்சிக்கட்டும்.
The article is super.
ReplyDeleteகட்டுரை எழுதிய ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்!
ReplyDeleteகட்டுரையாளருக்கு பல்லாயிரம் நன்றிகள்!
ReplyDeleteஎங்கள் குரல் உங்கள் எழுத்தில்.
படித்தவர்கள் பிடிதிருந்தால் நண்பர்களுக்குத் தெரிவியுங்கள்.
நான் எனது நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டேன்.
அப்ப நீங்க!......
கட்டுரையாளருக்கு பல்லாயிரம் நன்றிகள்!
ReplyDeleteஎங்கள் மனதில் உள்ளது உங்கள் எழுத்தில்.
கருணை என்பது கடவுளுக்கு அப்புறம் ஆசிரியர்களுக்குத்தான் உண்டு. வாழ்வியல் சூழலுக்கு ஆட்பட்டு கரும்புச் சக்கையாய் வரும் மாணவச் செல்வங்களை கற்பித்தல் சூழலுக்கு மாற்றும் வல்லமையால்தான் ஆசிரியர்களை எழுத்தறிவிக்கும் இறைவன் என்றார் போலும். தன் பத்திரிகையில் பரபரப்பு செய்தி வெளியிட ஆசிரியர் மாணவர்கள் என்ற கதைத்தலத்தை கையில் எடுக்ப்பது பத்திரிகை தர்மம் & அறமாகது.அரசுப் பள்ளிக்கும் ஆற்றல் உண்டு என்பதை விளக்க இது போன்ற கட்டுரைகளை பாடசாலையில் ஆசிரியர்கள் தொடர்ந்து வெளியிட வேண்டும். கட்டுரை ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
ReplyDeleteகோ.ராதாகிருஷ்ணன் ஆசிரியர்
Thank u sir, your articles is excellent.
ReplyDeletethank u sir
ReplyDeletepallikkodam, saattai pondra tamil films vanthaalum intha article is one of the manasaatchiyin kural
ReplyDeletegreat words from a govt. Teacher. It s a real article. Thank u.............. A govt.shl TET pasd tr.
ReplyDeletepallikkodam, saattai pondra tamil films vanthaalum intha article is one of the manasaatchiyin kural by jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj
ReplyDeleteஇக்கட்டுரையாளருடன் பணிபுரியும் சகஆசிரியர் என்பதில் நான் பெருமிதம் அடைகிறேன்.
ReplyDeleteஊடகங்களின் கண்களில் அகப்படாமல் எங்கோ ஓர் மூலையில் சத்தமின்றி சாதிப்பவை அரசுப் பள்ளிகளே!
தமிழகத்தின் கடைக்கோடியில் ஓர் குக்கிராமத்தில் உள்ளது எங்கள் அரசு உயர்நிலைப் பள்ளி. பணிபுரியும் ஆசிரியர்கள் 8. காலிப்பணியிடம் 5.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள் 53. தேர்ச்சி பெற்றவர்கள் 51. தேர்ச்சி சதவீதம் 96%. பள்ளி முதல் மதிப்பெண் 450. இரண்டாம் மதிப்பெண் 441. மூன்றாம் மதிப்பெண் 431. பாடவாரியாக பெற்ற முதல் மதிப்பெண்கள் தமிழ் 94, ஆங்கிலம் 71, கணிதம் 97, அறிவியல் 98, சமூக அறிவியல் 100.
25 ஆண்டுகள் அறிவியல் பாடம் போதித்த அடுத்த ஆண்டு ஓய்வு பெறவுள்ள தலைமை ஆசிரியர் திரு. V.செல்வராஜ் அவர்கள் ஆசிரியர் பற்றார்க்குறை காரணமாக சமூக அறிவியல் பாடம் போதித்தார். சமூக அறிவியல் பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் 3 பேர். 99 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 3 பேர்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான தேர்ச்சியைப் பெற்றுத்தரும் பள்ளியாக இருந்தும் இப்பள்ளியில் இதுநாள்வரை ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. எழுத்தர், அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர், துப்புரவாளர், காவலாளி போன்ற பணியிடங்களும் காலியாகவே உள்ளன. அப்பணிகளை ஆசிரியர்கள் (?!) பகிர்ந்து செய்ய வேண்டிய நிலை உள்ளது. பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் நிலை இதுவே.
குறைகள் பலவற்றைத் திறம்படக் கடந்து நிறைவான தேர்ச்சியைப் பெற்றுள்ளோம். இதற்கு கைம்மாறாக அரசிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது பரிசோ பாராட்டோ அல்ல...
இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பினால் போதும்..
சாதிப்போம் இன்னும் வெகுதூரம்...!!
-சக பயணி
சபரிஷ்
திருத்தம்;
Deleteபள்ளியின் மூன்றாம் மதிப்பெண் 439.
தேர்வு எழுதிய 53 பேரில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 11 பேர்.
_
சபரிஷ்
திரும்ப திரும்ப பல்வேறு ஊடகங்களும் தனியார் பள்ளியையும், அரசு பள்ளியையும் ஒப்பிட்டு அரசு பள்ளிகள் மோசம் என்று கூறுவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.
ReplyDeleteதனியார் பள்ளி ஆசிரியர்கள் சம்பளத்திற்காக அடிமையாய் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள்.
ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒரு மாணவனின் வாழ்க்கையில் ஒளியேற்ற நம்மால் இயன்றதை செய்வோம் என இஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள்.
ஒப்பிட்டு தான் ஆக வேண்டும் என்றால் 6 ஆம் வகுப்பு சேர்க்கையின் போது ஒரு நுழைவுத் தேர்வு வைத்து மாணவர்களை மதிப்பீடு செய்து பாருங்கள். ஒன்றுமே தெரியாத மாணவர்களின் மதிப்பெண் சதவீதம் எவ்வளவு உயர்ந்துள்ளது என முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.
6 ஆம் வகுப்பு வரை துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கற்று கொடுக்கவில்லை என அர்த்தம் புாரிந்து கொள்ள வேண்டாம். அங்கும் மாணவர்கள் முறையாக பள்ளிக்கு வருவதில்லை. மேலே கட்டுரையாசிரியர் கூறிய அதே பிரச்சினை துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் உள்ளது.
தயவு செய்து அரசு பள்ளியையும், தனியார் பள்ளியையும் ஒப்பிட்டு பார்க்கும் ஊடகங்களின் போக்கு இனியாவது மாற வேண்டும்.
ஆசிரியர்களை அவர்களின் போக்கில் பாடம் எடுக்க விட்ட போதும்
ReplyDeleteமாணவனை கேட்க கூடாத கேள்விகள் ;
ஏன் தாமதம்,ஏன் வீட்டு பாடம் எழுதலை, ஏன் நேற்று வரலை, படி,....
இள.ஹரிஹரன்.பேர்ணாம்பட்டு
i realy appreciated your article. good reflection of all govt teachers.thank u
ReplyDeleteவானவில் பாண்ட் பற்றி எழுதியிருந்தாரே அந்த ரவிகுமார் தானே!
ReplyDeleteமிக மிக அருமையான கட்டுரை! வாழ்த்துக்கள்!
We, govt. teachers are getting salary is nothing but we are proud in uplifting our students from family of innocent poor parents in the society.
ReplyDeleteVery Good. Good Psychological approach. Good analysis. This article must be read by so called Educationist and Article writers in Daily Papers. Even then Hats off to the teacher who explained the real situation existing in the Govt High and Higher Secondary Schools of Tamilnadu. by M..D.Raju
ReplyDeleteஅரசு பள்ளி ஆசிரியரின் கஷ்டதை முதல் முறையாக தெரிவித்த உங்க்களுக்கு நன்றி. நமது உழப்பு ஏழை மாணவருகளுக்காகவே அவர்களின் முண்னேற்றமே நமக்கு பாராட்டு தவிர வேரெவரும் இல்லை. நன்றி
ReplyDeleteஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் தன்னலம் பாராமல் செய்யும் பணிகளையும் சேவைகளையும் அவர்களின் கஷ்டங்களையும் விரிவாக எடுத்துரைத்திருக்கின்றார். மாணவிகளுக்கு வக்கிர எண்ணத்துடன் தொல்லை கொடுத்து வரும் ஒரு சில மாணவர்கள், கலந்தாய்வு வழங்கியும் திருந்தாதவர்கள், இம் மாணவர்கள் பள்ளிக்கு செல்பேசியைக் கொண்டு வந்து வேறு சில மாணவர்களுடன் நீலப்படங்களைப் பார்த்தல், மது அருந்துதல், பான்ப்ராக் பயன்படுத்துதல், புகைப்பிடித்தல், மாணவிகளிடம் வக்கிர எண்ணத்துடன் பேசுதல், போன்றவற்றை கட்டுப்படுத்த முயற்சித்தால் ஆசிரியர்கள் மிரட்டப்படுகின்றனர். ஒருவித மனக்கஷ்டத்துடன் பணியாற்ற வேண்டியது உள்ளது.
ReplyDeleteசிறப்பான சேவை செய்யும் அரசுபள்ளி ஆசிரியர்களின் மீது ஊடகங்களின் பாராமுகம், எங்கோ தவறு செய்யும் ஒருசில அரசுபள்ளி ஆசிரியர்களின் தவறுகளுக்கு எல்லா அரசுபள்ளி ஆசிரியர்களையும் ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டுதல், கண்ணை மூடிக்கொண்டு விளம்பர லாபத்திற்காக தனியார் பள்ளிகளை துதிபாடுதல், பொன்ற சூழ் நிலைகளிலும் அரசுபள்ளி ஆசிரியர்கள் செய்துவரும் சிறப்பான பணிகளப் பற்றி கட்டுரையாளர் விரிவாக எடுத்துரைத்துள்ளார். நன்றி!
ReplyDeleteLot of thanks to the article writer. By R.RAMAN, BT.
ReplyDeleteMiga Arumaiyana katturai, Yadartha nilayai padam pottu katti irukirirgal. Vazthukkal.
ReplyDeleteநல்ல கட்டுரை. நானும் அரசுப் பள்ளியில் படித்து அரசு கலைக் கல்லூரியில் படித்தவன் தான். இன்று ஒரு அரசு கல்லூரியில் பணிபுரிபவன். இன்று மாணவர்கள் ஆசிரியரை மதித்தல் வெகுவாக குறைந்து போனது கவலை அளிக்கிறது. அதிலும் மாணவியர்கள் நடந்து கொள்ளும் விதம் வேதனை. சென்ற ஆண்டு கல்லூரி ஆண்டு தினத்தில் அவர்கள் நடந்து கொண்டது எங்கள் எல்லோரையும் தலை குனிய வைத்தது. மாணவியர்களை கண்டிக்கவும் பயப்படும் நிலை உள்ளது. இதைப்பற்றி எவருமே பேசவில்லை. இதுவும் வியப்பாக உள்ளது.
ReplyDeleteபணம் கொடுத்துப் படிக்க முடியாதவர்களையும், சில காரணங்களால் பள்ளியை விட்டு அனுப்பப்படுகிறவர்களையும், இவர்களைத் தேர்ச்சி பெற வைக்க முடியாது, இவனால் நம் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் குறைந்து விடும் என நம்பி மற்ற பள்ளிகளால் துரத்தப்படுபவர்களையும் தாயுள்ளத்தோடு அவர்களை சேர்த்துக் கொண்டு, அவர்களையும் நல்வழிப்படுத்தி, வெற்றி பெறச் செய்வதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களே என்பதையும் உரக்கவும், ஆணித்தரமாகவும் சொல்லுவோம். வாருங்கள் ஆசிரியத் தோழர்களே! ஒன்றுபடுவோம்! நம் வெற்றியை தமிழகமெங்கும் ஒலிக்கச் செய்வோம்! கட்டுரை எழுதிய ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்! அவர் பணி சிறக்கவும், நீடூடி வாழ்வும், மேலும் பல பெருமைகளைப் பெறவும் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteவாழ்க ஆசிரியர் சமுதாயம்!
பல குறைகளை வைத்துக் கொண்டும், பெரும்பாலும் மனத்தளவிலும், உடலளவிலும், கற்கும் திறனளவிலும் குறைந்த அதிக அளவு மாணவ, மாணவியர்களைக் கொண்டே இவ்வளவு சாதிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம், ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்களை ஒப்படைத்தால் தற்பெருமை(!) பேசும் தனியார் பள்ளிகளை ஓரங்கட்டி விடுவார்கள். கட்டுரையாளருக்கு தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteIt's a very good article. Thank usir & padasalai. T.Thennarasu
ReplyDeleteR.k.pet block
ஆசிரியர் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தான் தனியார்,மெட்ரிக் பள்ளிகளில் குறைந்த சம்பளத்துக்கு அதிக நேரம் உழைத்து அதிக ரிசல்ட் கட்டுகிறவர்கள். அனால் பின்னர் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பள்ளிக்கு வந்தவுடன் ஓய்வு எடுக்கிறார்கள் . வகுப்புக்கு செல்லாமல் இனக குழுகளாக சேர்ந்து தொலை கொடுத்துக்கொண்டு மாணவர்களை திசை திருப்பி பிறவி பயனை அடைகிறார்கள் இவர்களை தான் பெற்றோர்களும் பொதுமக்களும் அதிகாரிகளும் நம்பிகிறார்கள் .
ReplyDeleteஎனவே ,எதையும் எளிதில் நம்பிவிடும் பொதுமக்களின் தூற்றுதல்களாலும் எல்லா வகையிலும், எல்லோராலும் புண்படுத்தப்பட்டும் மேன்மக்களை இழிவு படுத்தியும் வசை படுவதை ஏற்க முடியவில்லை .