மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு எழுத
ஆன்-லைனில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், மேல்நிலைத் தேர்வு பள்ளி
மாணாக்கர்கள் / தனித்தேர்வர்களாகவும் தேர்வெழுதி தோல்வி அடைந்தவர்கள் /
தேர்வுக்கு வருகை புரியாது, தற்போது இச்சிறப்புத் துணைத் தேர்வு எழுத
விண்ணப்பித்துள்ளவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் (ஹால் டிக்கெட்) வரும் 17.06.2013
(திங்கட்கிழமை) மற்றும் 18.06.2013 (செவ்வாய் கிழமை) ஆகிய நாட்களில்
விநியோகம் செய்யப்பட உள்ளது.
”ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும்
ப்ரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு விநியோக
மையத்தில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். தேர்வர்கள்
தங்களது பத்து இலக்க விண்ணப்ப எண்ணை தெரிவித்து தேர்வுக்கூட அனுமதிச்
சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். சென்னை மாநகரைப் பொறுத்தவரை, சென்னை-2,
அண்ணாசாலை, மதரசா-ஐ-ஆசா-ம் மேல்நிலைப் பள்ளியில் தேர்வுக்கூட அனுமதிச்
சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்” என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த பொதுத் தேர்வுகளில்
தோல்வி அடைந்தோருக்காக, மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு, ஜுன் மாதம் 19-ஆம்
தேதி தொடங்கி ஜுலை 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதைப் பற்றி, மேலும் கூறுகையில் -
“தேர்வுக்கூட அனுமதிச் சீட்டிலேயே அவர்களுக்குரிய பதிவெண் மற்றும் தேர்வு
மையம் ஆகியன குறிப்பிடப்பட்டிருக்கும். தேர்வர்கள் அம்மையத்தில்
தேர்வெழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட
அனுமதிச்சீட்டினை பெற்றபிறகு, அதனை ஒரு நகலெடுத்து (Photocopy) தங்கள் வசம்
வைத்துக்கொள்ள வேண்டும். அசலினை தனித்தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் முதல்
நாளன்று தேர்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை
அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாகப்
பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும்
செய்வதோடு, எழுத்துத் தேர்விற்கும் வருகை புரிய வேண்டும்.
மேலும் செய்முறை மற்றும் கேட்டல் /
பேசுதல் திறன் தேர்வுகளைச் செய்யவேண்டிய தனித்தேர்வர்கள், தங்களுக்கு
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை
அணுகி மேற்காண் தேர்வுகளைச் செய்திடுமாறு அறிவிக்கப்படுகிறார்கள்.” என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...