"உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கும், தனியார்
மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என சுகாதார
துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ஆண்டுதோறும், எம்.பி.பி.எஸ்.,
படிப்பில், மாணவர் சேர்க்கைக்கு தகுதிபெறும் தனியார் கல்லூரிகளின் பெயர்
பட்டியல், எம்.சி.ஐ., மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ
பல்கலை இணைய தளங்களில் வெளியிடப்படுகிறது. அதை பார்க்காமல், குறிப்பிட்ட
கல்வியாண்டுகளில், மாணவர்கள், டி.டி., மருத்துவக் கல்லூரியில்
சேர்த்துள்ளனர்.
இந்த பிரச்னையில், எம்.சி.ஐ., யின் வழிக்காட்டுதல்படி, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு முன், குறிப்பிட்ட கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, அக்கல்லூரி உரிய அனுமதி பெற்றுள்ளதா? எவ்வளவு இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது? போன்ற அடிப்படை விவரங்களை, எம்.சி.ஐ., இணைய தளத்தில் பார்த்து உறுதிசெய்த பின்தான், கல்லூரியில் சேர வேண்டும் என்றார்.
குறிப்பிட்ட தனியார் கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்படும் தகவல்களை மட்டும் நம்பி அதில் சேரக்கூடாது. உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...