கடலூர் மாவட்டத்தில், தரம் உயர்த்தப்பட்டுள்ள
ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில்,
மாணவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் தராததால், வேறு பள்ளியில் சேர
முடியாமல், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில், ஆண்டுதோறும், ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகள், தரம்
உயர்த்தப்படுகின்றன. இந்தாண்டு, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை
குறித்து, அதற்கான செலவுகள், ஆசிரியர்கள் நியமனம் குறித்து, சட்டசபையில்
அறிவிக்கப்பட்டது.
ஆனால், கல்வித்துறை சார்பில், இன்னும் அறிவிப்பு
வெளியிடப்படாமல் உள்ளது. இதனால், நடுநிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு
தேர்ச்சி பெற்று, உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு சேர்வதற்கும்,
உயர்நிலைப் பள்ளிகளில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்ற
மாணவர்கள், பிளஸ் 1 சேருவதற்கு, இன்னும் மாற்றுச் சான்றிதழ்
வழங்கப்படவில்லை.
மாற்றுச் சான்றிதழை கொடுத்து விட்டால், வேறு
பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து விடுவர்; அப்படி சேர்ந்து விட்டால், தரம்
உயர்த்தப்பட்ட தங்கள் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் போய் விடும்
என்ற சூழலில், பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் உள்ளனர்.
தற்போது,
அனைத்துப் பள்ளிகளிலும், பிளஸ் 1 அட்மிஷன் முடிந்த நிலையில், 10ம் வகுப்பு
தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பள்ளிகளில் சேர, மாற்றுச் சான்றிதழ் பெற
முடியாமல் தவித்து வருகின்றனர்.
when will the upgraded Hr. sec. schools list published?
ReplyDelete