நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் தொடர் பிரச்னைகளை கண்டித்து போராட்டங்களை நடத்த மாணவர் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்
கழகத்தில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வருவதால் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது
பேராசிரியர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்கலை.,யில் பல்வேறு
கோப்புகள் தேங்கி கிடப்பதாக புகார் கூறப்படுகிறது.
மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, கல்லூரிகளை இடமாற்றம் செய்வது, மாணவர்களை அலைக்கழிக்கும் செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பொய்யான தகவல்கள் அளிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக ஊழியர்களிடம் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கும் பேரம் பேசப்படுவதாகவும் புகார் கூறுகின்றனர். தகுதி உடைய மூத்த பேராசிரியர்களை புறக்கணித்து சிண்டிகேட் உறுப்பினர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
பல்கலை.,யில் பல்வேறு பாட பிரிவுகளில் விரிவுரையாளர் பணிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படுவதில்லை என்ற ஆதங்கம் நிலவுகிறது.
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே பிரச்னைகள் தூண்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. கல்லூரிகளுக்கு அனுமதி, பல்வேறு கல்லூரிகளில் அனுமதி புதுப்பிப்பு உட்பட பல்வேறு செயல்களிலும் முறைகேடுகள் நடப்பதாக புகார் கூறப்படுகிறது.
பல்கலையில் மாணவிகளுக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடிகள் கொடுப்பதாக புலம்புகின்றனர். பல்கலை., தேர்வு துறையில் தேர்வுகளுக்கு உரிய நேரத்தில் முடிவுகளை அறிவிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தேர்வு துறையின் அலட்சியத்தால் மாணவர்கள் திரும்ப, திரும்ப தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு சான்றிதழ் பெறுவதில் பெரிதும் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் மேற்படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர்வதிலும் சிக்கல் நிலவுவதாக தொடர்ந்து புகார்கள் எழுப்பபடுகின்றன.
தேர்வறையில் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளிடம் உரிய கையெழுத்து பெறாதது, பாட புத்தகங்களை உரிய நேரத்திற்கு அனுப்பாதது, ஹால் டிக்கெட்களில் குளறுபடிகள், பல பாட பிரிவுகளுக்கு புத்தகங்களே இல்லாதது என பல குளறுபடிகள் நிலவி வருவதால் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் கண்ணீர் சிந்துகின்றனர்.
மேலும், பல்கலையில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பி.எப் தொகை பிடித்தம் செய்வதிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே பணியாற்றி வேறு பணிக்கு சென்ற பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பல ஆண்டுகளாக பி.எப் தொகை கொடுக்கப்படாமல் உள்ளதாக புகார் கூறப்படுகிறது.
எனவே, பல்கலை.,யில் தொடர்ந்து நிலவும் குளறுபடிகள், பிரச்னைகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இப்பிரச்னைகளை கண்டித்து தொடர் போராட்டம் நடத்த மகளிர் அமைப்புகள், மாணவர் சங்கங்கள், மாணவர் கூட்டமைப்புகள் முடிவு செய்துள்ளன. இந்த பிரச்னைகள் தொடர்பாக கவர்னர், முதல்வர், உள் துறை செயலாளர், கல்வித் துறை செயலாளர், யு.சி.ஜி சேர்மன் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களும் அனுப்பபட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...