என்ஜினீயரிங் விண்ணப்பித்த மாணவ–மாணவிகளுக்கு இன்று ரேண்டம் எண் வழங்கபட்டது
தமிழ்நாட்டில் 553 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் ஏறத்தாழ 2
லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட இருக்கின்றன.
இந்த ஆண்டு புதிதாக 11 என்ஜினீயரிங் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக்
கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அங்கீகாரம் பெற்றிருப்பதால் கூடுதலாக
3,300 இடங்கள் கிடைக்கும். என்ஜினீயரிங் படிப்பில் சேர ஒரு லட்சத்து 89
ஆயிரம் மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். பிளஸ்–2 கணிதம், இயற்பியல்,
வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண் அடிப்படையில் கட் ஆப் மார்க்
கணக்கிடப்படுகிறது. 200–க்கு எடுத்த கணிதம் மதிப்பெண் 100–க்கும் இதேபோல்
இயற்பியல் மதிப்பெண் 50–க்கும், வேதியியல் மார்க்கும் 50–க்கும்
மாற்றப்படும். அதன் அடிப்படையில் 200–க்கு எத்தனை மதிப்பெண் என்பது தெரிய
வரும்.
ஒரே கட் ஆப் மார்க் வந்தால்...
ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆப் மார்க் பெறும்போது யாருக்கு
முன்னுரிமை என்ற கேள்வி எழுகிறது. அந்த நேரத்தில் கணித மதிப்பெண்ணும்
அதுவும் சமமாக இருந்தால் இயற்பியல் பாட மதிப்பெண்ணும் ஒருவேளை அதுவும்
இணையாக இருக்கும்பட்சத்தில் (அப்போது வேதியியல் மதிப்பெண் சமமாகத்தான்
இருக்கும்) பிளஸ்–2 நான்காவது பாடத்தில் உள்ள மதிப்பெண்ணை பார்ப்பார்கள்.
அந்த மதிப்பெண்ணும் சமமாக இருப்பின் பிறந்த தேதியை பார்ப்பார்கள்.
அதாவது யார் சீனியரோ அவர் கவுன்சிலிங்கிற்கு முதலில் அழைக்கப்படுவார்கள்.
பிறந்த தேதியும் ஒரே தேதியாக இருந்தால் ரேண்டம் நம்பர் பயன்படுத்தப்படும்.
ரேண்டம் என்பது, விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர்
மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் 10 இலக்க எண் ஆகும். ரேண்டம் நம்பர் மதிப்பு
அதிகமாக உள்ளவர் கவுன்சிலிங்கிற்கு முதலில் அழைக்கப்படுவார்கள்.
ரேண்டம் நம்பர் ஒதுக்கீடு
அந்த வகையில், இந்த ஆண்டு என்ஜினீயரிங் விண்ணப்பித்துள்ள
மாணவ–மாணவிகளுக்கு ரேண்டம் நம்பர் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சென்னை
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) காலை
நடைபெற்றது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் ரேண்டம் எண் பட்டியலை
வெளியிட்டார். விண்ணப் பித்த அனைத்து மாணவர்களுக்கும் ரேண்டம் எண்
வழங்கப்பட்டுள்ளது.மாணவர்கள் www.anna.univ.edu
இணைய தளத்தில் சென்று tna-2013 கிளிக் செய்து விண்ணப்ப எண்ணை பதிவு
செய்தால் அடிப்படை தகவல்களுடன் ரேண்டம் எண்ணும் தெரியவரும். ரேண்டம் எண்
வெளி யிட்டதையடுத்து ரேங்க் பட்டியல் 12-ந்தேதி வெளியிடப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...