தொடக்க, நடுநிலை வகுப்பு ஆசிரியர்களுக்கு
2013-14ஆம் ஆண்டிற்கான பணியிடைப் பயிற்சிகள் மற்றும் மாதாந்திரக் கூட்ட
மையங்களை நடத்துவதற்கான முன் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள SCERT மற்றும்
மாவட்ட ஆசிரியர் கல்வி & பயிற்சி நிறுவனங்களை கல்வித்துறைச் செயலகம்
அறிவுறுத்தியுள்ளதாக அறிய வருகிறது.
இதனடிப்படையில் DIET விரிவுரையாளர்கள் இந்த
வாரம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம்
தலா ஒரு கருத்துக் கேட்புப் படிவத்தைக் கொடுத்து பலவுள் தெரிவு
அடிப்படையில் அச்சிடப்பட்டிருந்த வினாப்பட்டிகளைப் பூர்த்தி செய்து
பெற்றுச் சென்றனர். இதில் எந்த மாதிரியான பயிற்சிகள் தேவைப்படுகின்றன எனக்
கேட்கப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் பெற்ற படிவங்களைத் தொகுத்து
பெரும்பான்மையானோர் கேட்டுள்ளவாறு பயிற்சி நடத்தப் பரிந்துரைத்து
தொகுப்பறிக்கையை இந்த வார இறுதிக்குள் SCERT மூலமாக செயலகத்திற்குச்
சமர்ப்பிப்பதாக விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதனால் குறுவள மையக்
கூட்டங்கள் (சி.ஆர்.சி) மற்றும் பயிற்சிகள் பற்றிய அறிவிப்பை விரைவில்
எதிர்பார்க்கலாம். ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ள வகுப்புகளைக்
கையாளும் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி நடத்தப்படலாம்.
நன்றி : தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...