தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில்
மாணவர்கள் வெற்றி பெற, தேசியளவில் ஒரே பாடத் திட்டம் அவசியம் என, ஓய்வு
பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் என்.திருநாவுக்கரசு வலியுறுத்தினார்.
அரூரை அடுத்த கோ.கூட்டுரோட்டில் இந்தியன்
சி.பி.எஸ்.இ பள்ளித் தொடக்க விழா கல்வி நிறுவனத் தலைவர் ஏ.கே.பழனியப்பன்
தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியைத் தொடக்கிவைத்து ஓய்வு பெற்ற
முதன்மைக் கல்வி அலுவலர் என்.திருநாவுக்கரசு பேசியது:
மாநிலக் கல்வித் திட்டம், சிபிஎஸ்இ, ஆங்கிலோ இந்தியன் உள்பட 4 வகையான பாடத் திட்டங்கள் தமிழகத்தில் அமலில் உள்ளன. தமிழக மாணவர்கள் பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்ஸ், வங்கித் தேர்வு உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால், தேசிய அளவில் ஒரே பாடத் திட்டம் அவசியம்.
தருமபுரி மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்று கூறப்படுகிறது. ஆனால், தற்போது தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தான் அதிகளவு மாணவர்கள் போட்டித் தேர்வுகளிலும், ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் கல்வி வளர்ச்சியில் முன்னிலையில் இருக்கும் மாவட்டங்களில் தருமபுரி மாவட்டமும் ஒன்றாக உள்ளது என்றார் அவர்.
விழாவில், வட்டாட்சியர் அ.ஜெ.செந்தில்அரசன், மருத்துவர் எம்.முருகன், இந்தியன் கல்வி நிறுவன துணைத் தலைவர் ஏ.கே.பி மூர்த்தி, செயலாளர் ஆர்.முத்துசாமி, பொருளாளர் எம்.பி.இளையப்பன், இணைச் செயலாளர் பிரபாகரன், நிர்வாகிகள் என்.சுப்பிரமணி, ஏ.குமாரசாமி, என்.முருகேசன், சசிகலா மூர்த்தி, பள்ளி முதல்வர்கள் எஸ்.அமலநாதன் (சிபிஎஸ்இ), ஜெ.ஜான் இருதயராஜ் (மெட்ரிக்), பி.டி.ஆர்.வி கல்வி நிறுவன நிர்வாக அலுவலர் கே.கார்த்திக், வெற்றி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளித் தலைவர் எம்.எம்.கோபிநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தேசிய அளவில் ஒரே பாடத் திட்டம் அவசியம்
ReplyDelete