பாலிடெக்னிக் கல்லூரிகளில், இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ., படித்த
மாணவர்கள், நேரடியாக, இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பில்
சேர்க்கப்படுகின்றனர். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், மே, 6ம்
தேதி துவங்கி, வரும், 24ம் வரை தேதி வழங்கப்பட்டது.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிந்து, 20 சதவீத இட ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கு விண்ணப்ப
வினியோகம் நேற்று துவங்கியது. விண்ணப்பங்கள் விலை, 150 ரூபாய். இம்மாதம்,
21ம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட உள்ளன.
மத்திய அரசு மனித வள மேம்பாட்டு துறையின் கீழ், சென்னை, தரமணியில் உள்ள
டாக்டர் தர்மாம்பாள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, கோவை அரசினர்
மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில், தலா, 25 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு
ஒதுக்கப்பட்டுள்ளன.
ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு
வீரர்கள் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், இப்பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், ஜாதி சான்றிதழ்களின் நகலை கொடுத்து,
இலவசமாக விண்ணப்பங்களை பெறலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...