இந்தக் கல்வியாண்டு முதல், தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தில், 2 புதிய டாக்டோரல் படிப்புகள் மற்றும் 1 முதுநிலைப்
படிப்பு ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இன்டக்ரேட்டட் பிஎச்.டி., மற்றும் எக்ஸ்டர்னல்
பிஎச்.டி., என்ற பெயரில் டாக்டோரல் படிப்புகளும், மாலிக்யூலர் பிளான்ட்
ப்ரீடிங் என்ற பெயரில் எம்.எஸ்சி., படிப்பும் துவங்குகின்றன.
பயிர் வகைகளில் ஏற்பட்டுவரும், ஜெனோமிக்ஸ் மற்றும் ஜெனடிக் பிரிவுகளின் வளர்ச்சியை அடுத்து, மேற்கூறிய மாலிக்யூலர் பிளான்ட் ப்ரீடிங் முதுநிலைப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விதை தொழில்துறையில் மாணவர்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும், மாலிக்யூலர் தொடர்பான பணிகளில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையிலும், பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டிணைப்பு முறையில், ஜெனோமிக்ஸ் உபகரணங்களுடன், கிளாசிக்கல் பிளான்ட் ப்ரீடிங் அணுகுமுறைகளை உள்ளடக்கியதாக இப்படிப்பு இருக்கும்.
இப்படிப்பில், ஓராண்டை நிறைவு செய்யும் மாணவர், பல்கலையில் பணிசெய்து கொண்டிருப்பார் மற்றும் பின்னாளில், தீசிஸ் ஆராய்ச்சிக்காக விதை நிறுவனத்தில் பணியாற்றுவார்.
இன்டக்ரேட்டட் பிஎச்.டி., படிப்பானது, 4 வருட ஆராய்ச்சி படிப்பாகும். இவற்றில், 3 ஆண்டுகள் தீசிஸ் பணிகளும், ஒரு வருடம், ஜெனரிக் ஆராய்ச்சி பயிற்சி மற்றும் ஒற்றை டிகிரியில் துறை சம்பந்தமான சிறப்பு ஆராய்ச்சி உள்ளடக்கம் ஆகியவை அடங்கிய கோர்ஸ்ஒர்க் ஆகியவை உள்ளடங்கும்.
வருங்காலத்தின் சவால் நிறைந்த சூழல்களை சமாளிக்கும் வகையில், மாணவர்கள், சிறப்பான லைவ் ப்ராஜெக்ட்களில் பயிற்சியளிக்கப்படுவார்கள். இன்டக்ரேட்டட் பிஎச்.டி., படிப்பானது, பட்டப் படிப்பை முடித்தவுடன் பிஎச்.டி., சேர விரும்பும் மாணவர்களுக்கு, ஒரு வரப்பிரசாதம். இப்படிப்பு, 5 ஆண்டுகளுக்கு பதிலாக, 4 ஆண்டுகள் காலஅளவைக் கொண்டது என்பதை கவனிக்க வேண்டும்.
இந்தப் படிப்பானது, இந்தாண்டு முதல், அக்ரோனமி, பிளான்ட் ப்ரீடிங் மற்றும் ஜெனடிக்ஸ், அக்ரிகல்சுலர்(agricultural) என்டமாலஜி மற்றும் அக்ரிகல்சுலர் மைக்ரோபயாலஜி ஆகியவற்றில் செயல்படுத்தப்படும்.
எக்ஸ்டர்னல்(external) பிஎச்.டி., படிப்பை பொறுத்தவரை, ஏதேனுமொரு இந்திய மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட மாநில வேளாண் பல்கலையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர், 26 துறைகளில் ஏதேனுமொன்றில், TNAU அங்கீகாரம் பெற்ற மேற்பார்வையாளரின் கீழ் பதிவு செய்யலாம். அதேசமயம், அதுபோன்று பதிவு செய்பவர்கள், அரசு அல்லது தனியார் நிறுவங்களில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தொழில்துறை அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
இந்த 2013-14ம் கல்வியாண்டில் மட்டும், 39 பாடப்பிரிவுகளில் முதுநிலைப் படிப்புகளுக்கும், 26 பாடப்பிரிவுகளில் ரெகுலர் பிஎச்.டி., படிப்புகளுக்கும், 4 பாடப்பிரிவுகளில் இன்டக்ரேட்டட் பிஎச்.டி., படிப்புகளுக்கும் மற்றும் 26 பாடப்பிரிவுகளில் எக்ஸ்டர்னல் பிஎச்.டி., படிப்புகளுக்கும், இப்பல்கலையின் சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்கூறிய படிப்புகள் அனைத்தும், பல்கலை வளாகத்தில் மட்டுமல்லாது, கோவை, மதுரை, கள்ளிகுளம், பெரியகுளம் மற்றும் மேட்டுப்பாளையம் போன்ற இடங்களிலுள்ள உறுப்பு கல்லூரிகளிலும் வழங்கப்படவுள்ளன.
www.tnau.ac.in என்ற இணையதளம் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், தேவையான ஆவணங்களை இணைத்து, கட்டணங்களுக்கான டிடி.,களையும்(ஒரு பாடத்திற்கு ரூ.1000 மற்றும் SC/ST பிரிவு மாணவர்களுக்கு ரூ.500) இணைத்து, Dean, School of Post Graduate Studies, TNAU என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஒவ்வொரு பாடத்திற்கும், தனித்தனி விண்ணப்ப கட்டணம் செலுத்தப்பட வேண்டும். முதுநிலைப் படிப்புகளுக்கான விண்ணப்பத்தை பெறுவதற்கான கடைசித்தேதி ஜுன் 29 மற்றும் டாக்டோரல் படிப்புகளுக்கு ஜுலை 22.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...