எஸ்.சி- எஸ்.டி, இன நடுநிலைப்பள்ளிகளில்
பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாவட்டம், மற்றும் மாவட்ட
விட்டு பிற மாவட்டங்களுக்கு பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது.
இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது, 2013 - 2014-ம் கல்வி ஆண்டிற்கான ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் நடுநிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர், ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும்
காப்பாளர், இடைநிலை ஆசிரியர் மற்றும் காப்பாளர், உடற்கல்வி ஆசிரியர், கணினி
பயிற்றுனர் ஆகியோர்களுக்கு மாவட்டத்திற்குள் பொதுமாறுதல் கலந்தாய்வு
மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 07.06.2013 காலை 9.00 மணி
அளவிலும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும்.
இதில் அம்மாவட்டத்தில் மூன்று ஆண்டு காப்பாளர் பணி முடித்தவர்கள், பணி
நிரவல் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு
விண்ணப்பித்தவர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த
செய்திக்குறிப்பு கூறுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...