சமச்சீர் கல்வி திட்டத்தின் படி, நடப்புக் கல்வியாண்டில் 9-ம் வகுப்புக்கு முப்பருவப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் அதிக கல்விச்சுமை திணிக்கப்படுவதாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இதனைக் கருத்தில்கொண்டு, கடந்த ஆட்சிக்காலத்தில் சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்பட்டது.
அதில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என தனித்தனியாக மாணவர்கள் பிரித்து படிக்கும் வகையில் முப்பருவப் பாடத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.இதற்கு பெரும்பாலான தனியார் மெட்ரிக் பள்ளிகள் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்தன.இந்நிலையில், பல்வேறு போராட்டங்களுக்கு இடையே கடந்த கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி வழங்கப்பட்டது.
இந்நிலையில், நடப்புக் கல்வியாண்டில் 9-ம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வி முறையில் முப்பருவப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட மாணவர்களின் தனித்திறனுக்கும் 40 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.இந்த முறை நடப்பாண்டும் தொடரும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாகராஜமுருகன் கூறியது:
மாணவர்கள், தங்களது சராசரி உடல் எடையில் 10 சதவீத அளவுக்கு மட்டுமே புத்தகத்தை எடுத்து செல்ல வேண்டும் என்ற அரசு தீர்மானத்தின்படி சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு முதல் 9-ம் வகுப்புக்கும் முப்பருவப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களின் மன அழுத்தம் குறையும். மேலும் முதல் நாளன்று தொடங்கிய பாடத்தை அந்த ஆண்டு முடியும் வரை படித்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...