"முஸ்லிம்கள் அதிகமாக வாழும், 90 மாவட்டங்களில், கல்லூரிகள் துவக்கப்பட
வேண்டும்; 10 சதவீதத்திற்கு அதிகமாக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட
நகரங்களில், கஸ்தூரிபாய் காந்தி மகளிர் பள்ளிகள் துவக்கப்பட வேண்டும்" என
பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்து உள்ளது.
மதரசாக்களில் மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கும் ஆசிரியர்களுக்கான
சம்பளத்தை, 6,000 ரூபாயிலிருந்து, 8,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும். அங்கு
பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, 12 ஆயிரம்
ரூபாயிலிருந்து, 15 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.
தேசிய அளவிலான பள்ளிக் கல்வியில் சேர்ந்து படிக்க விரும்பும், மதரசா
மாணவர்களுக்கு, தேர்வுக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். முஸ்லிம்கள்
அதிகமாக வாழும், 90 மாவட்டங்களில், கலை, அறிவியல் கல்லூரிகள் துவக்க
வேண்டும். இதன் மூலம், அவர்கள் எளிதாக கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வழி
ஏற்படும்.
10 சதவீதத்திற்கு அதிகமாக முஸ்லிம்கள் வாழும் நகரங்களில், முஸ்லிம்
பெண்கள் படிக்க ஏதுவாக, "கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா&' என்ற,
மகளிர் கல்லூரிகள் துவக்க வேண்டும். சிறுபான்மையினர் அதிகம் வாழும்
மாவட்டங்களில், "நவோதயா வித்யாலயா" அமைப்பில், தலா, இரண்டு பள்ளிகள் துவக்க
வேண்டும். இவ்வாறு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் மீது, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, விரைவில் தக்க நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...