தமிழகத்தில், எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை,
80.1 சதவீதமாக உள்ளது. எழுத்தறிவு பெற்ற பெண்கள், 73 சதவீதம் பேராக
உள்ளனர். எழுத்தறிவு பெற்றோரில், கன்னியாகுமரி மாவட்டம், 91.7 சதவீதத்துடன்
முதலிடத்திலும், சென்னை 90.2 சதவீதத்துடன், இரண்டாம் இடத்திலும் உள்ளன.
ஏழு வயதுக்கு மேற்பட்டவர், ஒரு மொழியில் எழுத
மற்றும் படிக்கத் தெரிந்திருந்தால், அவரை எழுத்தறிவு பெற்றவராக
கணிக்கின்றனர். இதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள, 7.21 கோடி மக்கள்
தொகையில், 5.18 கோடி பேர் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர் என, 2011ம்
ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மொத்த மக்கள் தொகையில், 2.80 கோடி ஆண்களும், 2.37 கோடி பெண்களும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். எழுத்தறிவு பெற்றவர்களின் சதவீதம், 80.1 சதவீதம். இதில், ஆண்கள், 86.8 சதவீதம், பெண்கள், 73.4 சதவீதம். எழுத்தறிவு பெற்றோரில், கன்னியாகுமரி மாவட்டம், 91.7 சதவீதத்துடன் முதலிடத்திலும், சென்னை 90.2 சதவீதத்துடன், இரண்டாம் இடத்திலும், தூத்துக்குடி, 86.2 சதவீதத்துடன், மூன்றாம் இடத்திலும் உள்ளன.
மிகக் குறைந்த எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக தருமபுரி உள்ளது. இம்மாவட்டத்தில், 68.5 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், 71.5 சதவீதத்துடனும், அரியலூர், 71.3 சதவீத்ததுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
எழுத்தறிவு பெற்ற ஆண்களை அதிகம் கொண்ட மாவட்டமாக, 93.7 சதவீதத்துடன் சென்னை முதலிடத்திலும், எழுத்தறிவு பெற்ற பெண்களை அதிகம் கொண்ட மாவட்டமாக, 89.9 சதவீதத்துடன் கன்னியாகுமரி முதலிடத்திலும் உள்ளன. இரு பாலினரிலும் கடைசி இடத்தில், தருமபுரி மாவட்டம் உள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...