ஜூன்/ஜூலை 2013, மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்விற்கு தனித்தேர்வர்களை ‘சிறப்பு அனுமதித் திட்டத்தின்’ கீழ் தேர்வெழுத அனுமதித்தல்
செய்திக்குறிப்பு
ஜூன்/ஜூலை 2013 மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வெழுத இவ்வலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் Online-ல் விண்ணப்பிக்கத்தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ‘சிறப்பு அனுமதித்திட்டத்தின்’ கீழ் Online-ல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:
1. மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.
2. மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
Online-ல் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முறை :
ஜூன்/ஜூலை 2013 மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்விற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான அறிவுரைகளை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி தனித்தேர்வர்கள் தமது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
Online-ல் விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் :
சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் 06.06.2013 (வியாழக்கிழமை) முதல் 07.06.2013 (வெள்ளிக்கிழமை) வரை தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்துகொள்ள வேண்டும். 07.06.2013 மாலை மணி 05.00-க்குப் பிறகு விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலாது.
தேர்வுக் கட்டணம் :-
ஒரு பாடத்திற்கு - ரூ.50 + (இதர கட்டணம் ரூ.35/-)
இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000/-த்தை செலுத்த வேண்டும்.
Online மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட Chalan-ஐ மட்டுமே தேர்வுக் கட்டணம் செலுத்த பயன்படுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்த சலானில் குறிப்பிட்டுள்ள தொகையினை 08.06.2013 (சனிக்கிழமை)-க்குள் தமிழ்நாட்டில் """"கோர் பாங்கிங்"" சேவை உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு கிளையிலும் அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6 என்ற பெயரில் தேர்வுத் தொகையினை செலுத்த வேண்டும்.
(நேரம் :- வங்கியின் விதிகளுக்குட்பட்டது)
Online-ல் பதிவு செய்த பின்னர், சமர்ப்பிக்கும் முறை :-
Online-ல் பூர்த்தி செய்து புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் (Confirmation copy), தேர்வுக் கட்டணம் செலுத்திய SBI வங்கி சலான் மற்றும் மார்ச் 2013-ல் தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகலினை இணைத்து தனித்தேர்வர்கள் 14.06.2013 (வெள்ளிக்கிழமை) மற்றும் 15.06.2013 ( சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் சென்னை - 6, அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தபால் மற்றும் தனியார் கொரியர் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
ஆன்-லைன் மூலம் இறுதியாகப் பெற்ற தனித்தேர்வரின் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தில் ((Confirmation copy), சான்றொப்பம் பெறுதல்
தனித்தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் இறுதியாகப் பெற்ற தனித்தேர்வரின் புகைப்படத்துடன் கூடிய Print Out-ல், மீண்டும் தனித்தேர்வரின் அதே மாதிரியான புகைப்படத்தினை ஒட்ட வேண்டும். தனித்தேர்வர்கள் இவ்விண்ணப்பத்தில், அவர்கள் இறுதியாகப் பயின்ற பள்ளித் தலைமையாசிரியர் அல்லது Gazetted Officer- ரிடம் புகைப்படத்தில் சான்றொப்பம் பெறுதல் வேண்டும்.
தேர்வு மையம் :
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.
தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு மதிப்பெண் சான்றிதழ் அனுப்பும் பொருட்டு விண்ணப்பத்துடன் ரூ.40/-ற்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறை ஒன்றினை இணைக்க வேண்டும்.
இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவுரைகளின்படி வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பாடங்கள் வகைப்பாடு அறிந்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...