Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு - தமிழகத்தில் 50% தேர்ச்சி


               இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நடத்தப்பட்ட என்.இ.இ.டி., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், தமிழகத்தில் தேர்வெழுதியோரில், 50% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
              அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு(All India Pre Medical Test) பதிலாக, இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, NEET(National Eligibility cum Entrance Test) தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வையும் CBSE -தான் நடத்துகிறது. இதை, தமிழகத்திலிருந்து 22,073 மாணவர்கள் எழுதினர். இதில் 50% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

             தேசிய அளவில், தகுதி விகிதம் சற்றே கூடுதலாகும். தேர்வெழுதிய 6.58 லட்சம் மாணவர்களில், 55%க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில், 1 லட்சத்து 57 ஆயிரத்து 214 பொதுப் பிரிவு மாணவர்களும், 1 லட்சத்து 49 ஆயிரத்து 078 ஓ.பி.சி., பிரிவு மாணவர்களும், 42 ஆயிரத்து 234 எஸ்.சி., பிரிவு மாணவர்களும், 16,518 எஸ்.டி., பிரிவு மாணவர்களும் அடங்குவர்.

              அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவை விட, தமிழகத்தில் இத்தேர்வை எழுதிய மாணவர்கள் குறைவு. ஏனெனில், தமிழகத்தில், மாநில அளவில், மருத்துவப் படிப்பில் சேர, நுழைவுத்தேர்வு கிடையாது என்பது இதற்கு முக்கிய காரணம்.

            இத்தேர்வை எழுதிய தமிழக மாணவர்கள், தாங்கள் நாட்டின் பல பகுதிகளிலுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தனர். அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும், 15% இடங்கள், அகில இந்திய கோட்டாவிற்கு ஒதுக்கப்படுகின்றன.

             தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 322 இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 15 இடங்களும், அகில இந்திய கோட்டாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

             மாணவர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள www.cbseneet.nic.in, www.cbse.nic.in, and www.cbseresults.nic.in. என்ற இணையதளங்களுக்கு செல்லவும். தகுதிபெற்ற மாணவர்கள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு தேவையான நடைமுறை செயல்பாடுகளைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive