தமிழகத்தில்
கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி
அளிக்கப்படுகிறது. இதுகுறித்த முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி 24ம்
தேதி ஆரம்பமாகிறது.தமிழகத்தில் ஆர்.எம்.எஸ்.ஏ சார்பில் 9ம் வகுப்பு மற்றும்
10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பல்வேறு பயிற்சிகள்
அளிக்கப்பட உள்ளது.
இதில் முதற்கட்டமாக சென்னையில் கணிதம், திருச்சியில்
ஆங்கிலம், கோவையில் அறிவியல், மதுரையில் சமூக அறிவியல், தஞ்சாவூரில் தமிழ்
பாட முதன்மை கருத்தாளர்களுக்கு 24 மற்றும் 25ம் தேதிகளில் பயிற்சி
அளிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 20 முதன்மை
கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இப்பயிற்சியை தொடர்ந்து 26 மற்றும் 27ம் தேதிகளில் கருத்தாளர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர். பின்னர் ஜூலை மாதம் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாட வாரியாக கருத்தாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் இப்பயிற்சிக்காக 20 முதன்மை கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாவட்டத்தில் சுமார் 1,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாட வாரியாக பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஏற்பாடுகளை ஆர்.எம்.எஸ்.ஏ உதவி திட்ட அலுவலர் நந்தகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் ஆவுடையப்ப குருக்கள், செல்வநாயகம் மற்றும் ஆறுமுகராஜன் செய்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...