பிளஸ் 2, தத்கால் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மாணவ, மாணவியர், ஹால்
டிக்கெட் வாங்க முடியாமல், நேற்று, காலை முதல், மாலை வரை, டி.பி.ஐ.,
வளாகத்தில் காத்திருந்து, தவித்தனர்.
இவர்களுக்கு, நேற்றும், இன்றும், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள
தேர்வுத் துறை அலுவலகத்தில், "ஹால் டிக்கெட்&' வழங்கப்படும் என,
தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதிலும் இருந்து,
ஹால் டிக்கெட் பெறுவதற்காக, 2,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், நேற்று
காலையிலேயே, டி.பி.ஐ., வளாகத்திற்கு வந்தனர்.
ஒரே நாளில், கூட்டம் அதிகளவில் வந்ததால், அவர்களை கட்டுப்படுத்த
முடியாமல், தேர்வுத்துறை ஊழியர்கள் திணறினர். பின், 30க்கும் மேற்பட்ட
போலீசார் விரைந்து வந்து, மாணவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். நான்கு,
கவுன்டர்கள் மூலமாக, மாணவர்களுக்கு, ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.
இதுகுறித்து, தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இரண்டு
நாளைக்கு, ஹால் டிக்கெட் வழங்குகிறோம் என, அறிவித்தோம். ஆனால்,
விண்ணப்பித்த அனைவரும், ஒரே நாளில் வந்து விட்டதால், கூட்டம்
அதிகமாகிவிட்டது. அனைவருக்கும், விரைவில், ஹால் டிக்கெட் கொடுத்து
விடுவோம்" என தெரிவித்தார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த பெற்றோர் பர்னபாஸ் கூறியதாவது: என் மகன்,
கணிதம், வேதியியல் பாடங்களில், தோல்வி அடைந்துவிட்டான். ஹால் டிக்கெட்
வாங்குவதற்காக, காலையில், மகனுடன் வந்தேன். பல மணி நேரமாக
காத்திருக்கிறோம்.
மாணவர்கள், படிப்பதை விட்டுவிட்டு, இங்கே வந்து, காலையில் இருந்து
காத்திருக்கின்றனர். விரைந்து, ஹால் டிக்கெட் வழங்க, துறை அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பிளஸ் 2 உடனடித் தேர்வை எழுத, இணையதளம் மூலம் விண்ணப்பித்த
மாணவர்களுக்கு, வரும், 17, 18ம் தேதிகளில், ஹால் டிக்கெட் வழங்கப்படும்.
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மையங்களில், ஹால்
டிக்கெட் வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள், தங்களது, 10 இலக்க விண்ணப்ப எண்களை தெரிவித்து, ஹால்
டிக்கெட்டை பெறலாம். ஹால் டிக்கெட்டில், மாணவர்களுக்குரிய பதிவெண் மற்றும்
தேர்வு மையம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சம்பந்தப்பட்ட மையங்களுக்குச் சென்று, மாணவர்கள், தேர்வெழுத வேண்டும்.
ஹால் டிக்கெட்டின் ஜெராக்ஸ் பிரதி ஒன்றை, மாணவர்கள், தங்களிடம்
வைத்துக்கொள்ள வேண்டும். அசல் ஹால் டிக்கெட்டை, தேர்வு மையத்தில் ஒப்படைக்க
வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...