Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: 20 சதவீதம் பள்ளி வாகனங்கள் இயங்குமா?


          தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 03ம் ‌தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் தொடர்ந்து அதிகமாக இருந்ததன் காரணமாக இந்த விடுமுறை ஜூன் 09 வரை நீடிக்கப்பட்டது.
 
      இதனையடுத்து விடுமுறை முடிந்து இன்று உற்சாகமாக மாணவ, மாணவிகள் இன்று பள்ளிக்கு சென்றனர். இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து குழுக்களை அமைக்காத பள்ளிகள், அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மற்றும் தகுதியற்ற வாகனங்கள் என, 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட, பள்ளி வாகனங்களை இயக்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

       பள்ளி வாகனங்கள், விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த மாதம், 24ம் தேதி முதல் கண்காணிப்பு நடவடிக்கையை, போக்குவரத்து துறை தீவிரப்படுத்தியது. இதற்காக, 11 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

         தமிழகத்தை பொறுத்தவரை, 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து, அவற்றிற்கு தகுதி சான்றிதழ் வழங்கும் பணியை, இக்குழுக்கள் மேற்கொண்டன.

          இதில், படிக்கட்டு சரியில்லாத வாகனங்கள், அவசர வழி கதவுகளின் பராமரிப்பின்மை, பழுதடைந்த டயர்கள் உள்ளிட்ட, பல்வேறு குறைபாடுகள் பள்ளி வாகனங்களில் காணப்பட்டன. மேலும், வாகன பாதுகாப்பிலும் குறைபாடுகள் அதிகமிருந்தன.
 
          சோதனை செய்யப்பட்ட, 2,873 பள்ளி வாகனங்களில், 2,194 வாகனங்களுக்கு, தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டன.

          மேலும், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறைபாடு உள்ள, 679 வாகனங்கள், தகுதியில்லாதவை என கண்டறியப்பட்டன. விபத்துகளை தடுக்கும் வகையில், பள்ளிகளில் போக்குவரத்து குழுக்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியம்.

          தமிழகத்தில், 5,660 பள்ளிகளில் போக்குவரத்து குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இதில், 2,576 பள்ளிகளில் மட்டுமே, போக்குவரத்து குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. மீதமுள்ள, 3,084 பள்ளிகளில், போக்குவரத்து குழுக்களை அமைக்காதது, ஆய்வு பணியில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தகுதி சான்றிதழ் பெறாத, 679 வாகனங்கள் மற்றும் போக்குவரத்து குழுக்களை அமைக்காத, 3,084 பள்ளிகளின் வாகனங்களை இயக்க அனுமதிக்க மாட்டோம் என, ஏற்கனவே போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

            பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்த பின்னரே, மீண்டும் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கான ஆய்விற்கு, வாகனங்களை எடுத்துச் செல்ல முடியும். இதே போல, போக்குவரத்து குழுக்களை அமைக்காத பள்ளிகள், உடனடியாக அமைத்து, ஒரு சந்திப்பு கூட்டத்தை நடத்த வேண்டியது அவசியம்.

          இதுதவிர, அங்கீகாரம் பெறாத, ஆயிரக்கணக்கான பள்ளிகளின் வாகனங்கள் இயங்க, அனுமதி வழங்குவதிலும், பிரச்னை நீடிக்கிறது. இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

            பள்ளி வாகன ஆய்வில், விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி வருகிறோம். தகுதி சான்றிதழ் பெறுவது மற்றும் போக்குவரத்து குழுக்களை அமைப்பதில், பள்ளிகளின் நிர்வாகத்தினர் உடனடியாக, தீர்வு காண வேண்டியது அவசியம். வாகனங்களை சோதனை செய்யும் பணி தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive