ஜெ.இ.இ., இரண்டாம் கட்ட தேர்வில், தமிழகத்தில், 3,198 மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவு, இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது.
கடந்த ஏப்ரலில் நடந்த ஜெ.இ.இ., முதன்மை தேர்வில், 13 லட்சத்திற்கும்
மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், 1.25 லட்சம் பேர், தேர்வாகினர்.
அவர்களுக்கு, இரண்டாம் கட்ட தேர்வு, நேற்று நடந்தது. இதில், 9,500 பேர்
தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட, ஒன்பது மையங்களில், 3,198 பேர்,
தேர்வு எழுதினர். தேர்வெழுதிய சென்னை மாணவர் கதிர்வேல் கூறுகையில், "பிளஸ் 2
தேர்வுகள் நடந்த போதே, ஜெ.இ.இ., நுழைவு தேர்வுக்கும், நேரம் ஒதுக்கி
படித்தேன். தேர்வு, எளிதாக இருந்தது; கணித வினாக்கள் மட்டும் கடினமாக
இருந்தன" என்றார்.
தேர்வில் வெற்றி பெற்றவர்களும், முதல், 20 சதவீத அளவிற்கு மதிப்பெண் பெற்ற மாணவர்களும், ஐ.ஐ.டி.,க்களில் சேரும் வாய்ப்பை பெறுவர்.
சென்னையில் ஜெ.இ.இ., நுழைவு தேர்வின் போது ஏற்பட்ட, திடீர் மின்
தடையால், 45 நிமிடத்திற்கும் மேலாக, தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள்
தவித்தனர். குரோம்பேட்டை, எம்.ஐ.டி., மையத்தில், 450க்கும் மேற்பட்ட
மாணவர்கள் தேர்வு எழுதினர். காலை தேர்வு, பகல், 12:00 மணிக்கு, முடிந்த
நிலையில், மதிய தேர்வு, பிற்பகல், 2:00 மணிக்கு துவங்கியது.
மாணவர்கள் தேர்வை ஆர்வமுடன் எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென,
மாலை, 3:20 மணிக்கு, மின்சாரம் தடைப்பட்டது. ஜெனரேட்டர் வசதி எதுவும்
செய்யப்படாத காரணத்தால், அறை முழுவதும் இருள் சூழ்ந்தது. இதனால், மாணவர்கள்
தேர்வு எழுத முடியாமல் தவித்தனர்.
மாணவர்களுடன் வந்திருந்த பெற்றோர், தேர்வு பொறுப்பாளரிடம் மின் தடை
குறித்து, புகார் தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மின்தடை ஏற்பட
வாய்ப்புள்ளது என தெரிந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
மாலை, 4:15 மணியளவில் மின்சாரம் வந்தது. பெற்றோரின் கோரிக்கையை ஏற்று,
தேர்வு எழுதக் கூடுதலாக, 50 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...