சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள பாடநூல் கழக
விற்பனை மையத்தில் இன்று பள்ளி பாடப்புத்தகங்கள் வாங்க மாணவர்களின்
பெற்றோர் கூட்டம் அலைமோதியது. பிளஸ்–1 பாடப்புத்தகம் இருப்பு இல்லாததால்
பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பாடப்புத்தகங்கள்
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி நோட்டுகள், ஜாமெட்ரி பாக்ஸ், கலர் பென்சில்கள், புத்தகப்பை, அட்லஸ், காலணிகள், சீருடைகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவை தவிர, மேல்நிலை கல்வி மாணவர்களுக்கு சைக்கிள், லேப்–டாப் ஆகியவற்றையும் இலவசமாக வழங்குகிறார்கள்.
தனியார் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் பாடப்புத்தகங்களை அங்கீகரிக்கப்பட்ட புத்தக கடைகளில் அல்லது பாடநூல் கழக விற்பனை மையங்களில் வாங்க வேண்டும். புத்தகங்களை மொத்தமாக வாங்கும் பள்ளிகளுக்கு தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் குடோன்களில் மொத்தமாக வழங்கப்படுகின்றன. அவ்வாறு புத்தகங்களை வாங்காத பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாடு பாடநூல் கழக விற்பனை மையங்களிலோ, அங்கீகரிக்கப்பட்ட புத்தக கடைகளிலோ புத்தகங்களை வாங்கலாம்.
அலைமோதும் பெற்றோர் கூட்டம்
சென்னை நகரில் பெரும்பாலான பெற்றோர்கள் நுங்கம்பாக்கம் கல்லூரிச்சாலை டி.பி.ஐ. வளாகத்தில் இயங்கும் தமிழ்நாடு பாடநூல் கழக விற்பனை மையத்தில்தான் புத்தகங்கள் வாங்க விரும்புகிறார்கள். மாணவர்களுக்கு தேவையான வினா–விடை வங்கி, கம் புத்தகம், சொல்யூஷன்ஸ் புத்தகம் போன்றவற்றை அருகில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக கட்டிடத்தில் வாங்கிவிடலாம் என்பதுதான் இதற்கு காரணம்.
டி.பி.ஐ.யில் நேற்று பாடப்புத்தகங்கள் வாங்க பெற்றோர்கள் கூட்டம் அலைமோதியது. விற்பனை கவுன்டர் தொடங்கி சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு நீண்ட கியூ வரிசையில் நின்று வாங்கிச்சென்றார்கள். தினசரி ஏராளமானோர் புத்தகம் வாங்க வருவதால், காலதாமதம் ஏற்படுவதை தடுக்க கூடுதல் விற்பனை கவுன்டர்களை திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பிளஸ்–1 புத்தகம் இருப்பு இல்லை
அனைத்து வகுப்புகளுக்கும் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பிளஸ்–1 வகுப்புக்கான பாடபுத்தகங்கள் மட்டும் இல்லை. இதனால், பிளஸ்–1 புத்தகங்கள் வாங்க வந்த மாணவ–மாணவிகளும், பெற்றோர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். ‘பிளஸ்–1 பாடப்புத்தகங்கள் இருப்பு இல்லை’ என்ற அறிவிப்பு வாசகத்தை அங்கே பார்த்த பிறகுதான், புத்தகம் இல்லை என்ற விவரம் அவர்களுக்கு தெரிய வருகிறது. வேலை நாட்களில் மட்டுமின்றி சனிக்கிழமையும் பாடப்புத்தகங்களை வாங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...