வரும் ஜூலை, 21ல் நடக்கும் முதுகலை ஆசிரியர்
தேர்வுக்கு, இதுவரை, 1.58 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆகியுள்ளன.
விண்ணப்பங்கள் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மாவட்ட முதன்மை
கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்கவும், வரும், 14ம் தேதி கடைசி நாள்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள,
2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித் தேர்வு
நடக்கிறது. டி.ஆர்.பி., நடத்தும் இந்த தேர்வுக்காக, கடந்த மாதம், 31ம்
தேதியில் இருந்து, மாநிலம் முழுவதும், விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு
வருகின்றன.
நேற்று வரை, 1.58 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆகியிருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த ஒரு வாரத்திற்கு, மேலும் சில ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. 75 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் பெறப்பட்டுள்ளன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...