Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்பங்கள் தயார்: அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் கிடைக்கும்


           ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை மையங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுப்பி வைக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

ஆசிரியர் தகுதித்தேர்வு

           மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு ரையுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, 23.8.2010 முதல் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு தமிழக அரசு, தகுதித்தேர்வை கட்டாயமாக்கி உள்ளது.கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 6½ லட்சம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 150 மதிப்பெண் கொண்ட தகுதித்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் அதாவது 90 மார்க் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர் ஆவார்கள். தகுதித்தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது ஆகும்.

12 லட்சம் விண்ணப்பங்கள்

           இந்த ஆண்டு தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17–ந்தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு 18–ந்தேதியும் நடத்தப்படுகிறது. தகுதித்தேர்வை இந்த முறை 7 லட்சம் ஆசிரியர்கள் எழுதுவார்கள் என்று தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது.இதை கருத்தில் கொண்டு 12 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன. விண்ணப்பங்களை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விண்ணப்பங்கள் விற்பனை மையங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுப்பி வைக்கப்படுகின்றன.

எப்போது கிடைக்கும்?

          தகுதித்தேர்வு விண்ணப்ப படிவங்கள் 17–ந்தேதி முதல் ஜூலை 1–ந்தேதி வரை விற்பனைக்கு கிடைக்கும். விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வுகட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு ரூ.250 மட்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 1–ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் (டி.இ.ஓ. ஆபீஸ்) சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தற்போதைய தகுதித்தேர்வு மூலமாக ஏறத்தாழ 13 ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களையும், 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணி இடங்களையும் நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு நடுநிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஏற்படும் காலி இடங்களுக்கு தேர்வுக்கு முன்பாக அரசு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அந்த காலி இடங்களும் சேர்த்து நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வு முறை

         இடைநிலை ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரையில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்–2, பட்டப்படிப்பு, பி.எட். மதிப்பெண் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.அவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். பிளஸ்–2 மதிப்பெண் தகுதிக்கு அதிகபட்சம் 10 மார்க்கும், இளங்கலை பட்டப்படிப்புக்கு 15 மார்க்கும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஆக மொத்தம் 40 மார்க் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இரண்டையும் சேர்த்து 100–க்கு ‘கட் ஆப் மார்க்’ எவ்வளவு? என்பது கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.




2 Comments:

  1. விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். என்ற் அறிவிப்பு பள்ளியினை தபால் அலுவலகமாக மாற்றி விட்டார்கள்

    ReplyDelete
  2. தினமலர் » சிறப்பு பகுதிகள்செய்தி »டீ கடை பெஞ்ச்
    மெம்பர் - செகரட்டரியை, கட்டாய மருத்துவ விடுப்புல, போகச் சொல்லிட்டாங்க...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி.
    ""எந்த துறை விவகாரம் வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
    ""ஆசிரியர் தேர்வு வாரியத்துல, மெம்பர் - செகரட்டரியா இருக்கற அவர்,ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்குகள்ல, ஐகோர்ட்டுல, பதில் மனுக்களை, தாக்கல் செய்யாம விட்டுட்டாரு...
    ""இதனால, தேர்வு வாரிய தலைவர், கோர்ட்கண்டனத்துக்கு ஆளானதோட இல்லாம, வழக்குல சம்பந்தப்பட்ட, 19 பேருக்கு, வேலை தரணும்னு, கோர்ட், உத்தரவு போட்டுடுச்சு... இதனால, தகுதியில்லாதவங்கன்னு நிராகரிச்சவங்களுக்கு, வேற வழியில்லாம, போஸ்டிங் தந்தாங்க...
    ""இந்த சம்பவத்தால, சேர்மன் சூடாகி, சம்பந்தப்பட்ட இயக்குனரை,"சஸ்பெண்ட்' செய்யணும்னு, அர”க்கு, கடிதம் எழுதியிருக்கார்... நடந்த சம்பவங்களுக்கு, மெம்பர் - செகரட்டரிதான் காரணம்னு சொல்லி, அவரை, கட்டாய
    மருத்துவ விடுப்புல போகச் சொல்லிட்டார் பா... '' என, ஒரே மூச்சில்முடித்தார் அன்வர்பாய்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive