பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல் புத்தகத்தில், காமராஜர் பிறந்த ஊர் விருதுநகர் அருகே, விருதுபட்டி என, தவறுதலாக குறிப்பிட்டுள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி
நிறுவனத்தால், உருவாக்கப்பட்ட, 10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில்,
100ம் பக்கத்தில், "இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு" என்ற
தலைப்பிலான பாடம் இடம் பெற்றுள்ளது. 105ம் பக்கத்தில், முன்னாள் முதல்வர்
காமராஜர் குறித்த தகவலில், காமராஜர், விருதுநகருக்கு அருகில் உள்ள,
விருதுபட்டி கிராமத்தில் பிறந்ததாக வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: விருதுநகரில் தான் காமராஜர் பிறந்தார்; விருதுபட்டி தான் விருதுநகராக மாறியது. 10ம் வகுப்பு பாடத்தில், விருதுநகர் அருகே, விருதுபட்டி என, குறிப்பிடப்பட்டுள்ளது சரியல்ல. இது, மாணவர்களை குழப்புவதாக உள்ளது.
விருதுபட்டி என்றழைக்கப்பட்ட விருதுநகரில் பிறந்தார் என்பது தான் சரி. ஊர் பெயர் தவறாக இடம் பெற்றதை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...