மாணவ, மாணவியர் அவதி
பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வுக்கு, இணைய தளம்
வழியாக விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள் என்ற நிலையில், இணைய தளம்
முடங்கியது. இதனால், பதிவு செய்ய முடியாமல், மாணவ, மாணவியர், கடும்
அவதிப்பட்டனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த ஒரு லட்சம் மாணவ, மாணவியர், விரைவில் துவங்க உள்ள உடனடித் தேர்வை எழுத உள்ளனர். இதற்காக, www.dge.tn.nic.in என்ற தேர்வுத்துறை இணையதளம் வழியாக, 3ம் தேதி முதல், 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்திருந்தது.
இறுதி நாளான நேற்று, ஏராளமான மாணவ, மாணவியர், இணைய தளத்தை பயன்படுத்த முயற்சித்ததால், இணைய தளம் முடங்கியது. காலையில் இருந்து, மாலை வரை, இணையதளத்தை பயன்படுத்த முடியாமல், மாணவ, மாணவியர், கடும் அவதிப்பட்டனர். இதனால், பல ஆயிரக்கணக்கான மாணவர்களால், தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.
இந்த பிரச்னை, தேர்வுத்துறையின் கவனத்திற்கு, நேற்றே கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கிராமத்து மாணவர்கள் நகர் பகுதிக்கு வந்து விண்ணப்பிப்பதற்குள் நேரம் முடிவடைந்து விடும். எனவே கூடுதலாக இரண்டு நாட்கள் அதிகரித்தால் தான் மாணவர்கள் முழுமையாக விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...