அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி?
- *
சேர்க்கையை
அதிகரிக்கும்.
- *
தமிழ்
மொழியை பாதிக்கும்
- *
தேவையற்றது.
என்ற
தலைப்பில் நாம் நமது வலைதளத்தில் வாக்கெடுப்பு நடத்தினோம். மூன்று நாட்கள் மட்டுமே
நடந்த இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான வாசகர்கள் ஆர்வமாக வாக்களித்தனர். ஏறத்தாழ
450 க்கும் அதிகமான வோட்டுகள் பதிவாகி இருந்தன. (ஆனால் நம் வலைதள வாக்கெடுப்பில் நடந்த
சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இறுதி கட்டத்தில் மிகவும்
குறைவாக காட்டப்பட்டுள்ளது.)
இருப்பினும்
பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் தான் மாற்றமே தவிர வாக்குகளின் சதவீதத்தில் பெரிய
மாற்றம் இல்லை. எனவே இறுதி கட்டத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் சதவீதத்தின்
அடிப்படையிலும், வாசகர்களின் எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நாம் இந்த சிறப்பு
கட்டுரை வெளியிடுகிறோம்.
சேர்க்கையை
அதிகரிக்கும்- முதலாவதாக
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்பது சேர்க்கையை அதிகரிக்கும் என்பதை எவராலும்
மறுக்க முடியாது. நிச்சயமாக சேர்க்கை உயரும். (பதிவான வாக்கு சதவீதம் - 79%)
தமிழ்
மொழியை பாதிக்கும் - அதே
சமயம் இதனால் தமிழ் மொழிக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படும் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது.
காரணம் தமிழ் மொழி கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய உயரிய செம்மொழி எனும்
போது அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வருவதால் மட்டும் தமிழுக்கு பாதிப்பு
ஏற்படாது. உண்மையில் தமிழை எவரும் அழிக்க முடியாது. தமிழர்கள் பல நாடுகளிலும் உயர்
பதவியில் பணியாற்றும் போது அங்கும் கூட தமிழ் மொழியை வளர்த்து தமிழை உலகளாவிய மொழியாக
மாற்ற இயலும். (பதிவான வாக்குகள் - 10%)
தேவையற்றது
– என வாக்களித்திருக்கும் சிலர் அதற்கான சரியான காரணங்களை பதிவு செய்யவில்லை என்பதால்
அவற்றை புறந்தள்ளுவோம். (பதிவான வாக்குகள் - 11%)
அரசு
பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அவசியம் தேவை, சேர்க்கையை அதிகரிக்கும் என்பதால் இதையே
பெருவாரியான ஆசிரியர்களின் விருப்பமாக கருதி இந்த வாக்கெடுப்பை நிறைவு செய்கிறோம்.
Super.. Gud decision in tn govt.. Techers training petru intha thitta thirku mulu othulaippu koduppargal. First step make best result..
ReplyDeleteBy jeeva B.T. Assistant
super itha itha itathan nan ethirparthen
ReplyDeleteporama pidichavangale poor students m english medium padikatum., hats offf to our c.m
ReplyDelete