Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PG TRB 2012 தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 23, 24–ந்தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு

             முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடப்பிரிவுகளில் தமிழ்வழி ஒதுக்கீட்டின் கீழ் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 23, 24–ந் தேதிகளில் சென்னை உள்பட 7 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.


           இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– 

                தமிழ்வழி முன்னுரிமை இடங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் (கிரேடு–1) நியமனத்திற்கான (2011–2012) போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் தமிழ்வழியில் படித்ததற்கான முன்னுரிமை கோரியவர்கள் 3.8.2012 மற்றும் 30.10.2012 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புகளில் வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் தமிழ்வழியில் ஒதுக்கப்பட்ட பணி இடங்களுக்கு அழைக்கப்பட்டனர்.

                   அப்போது, பெரும்பாலான தேர்வர்கள், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2, இளநிலை பட்டம், முதுகலை பட்டம், பி.எட். பட்டம்ஆகியவற்றை முற்றிலும் தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை. 

               இதனால், வரலாறு, பொருளாதாரம் மற்றும் வணிகவியல் பாடங்களின் தமிழ்வழி முன்னுரிமை பணி இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தால்நிரப்ப இயலவில்லை. 

சான்றிதழ் சரிபார்ப்பு 


             எனவே, மீதமுள்ள தேர்வர்களில் விண்ணப்பத்தில் தமிழ்வழி என்று குறிப்பிட்டுள்ளவர்களில் வரையறுக்கப்பட்ட மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் பாடவாரியாக சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்போது ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

 சான்றிதழ் சரிபார்ப்பு கீழ்க்கண்ட இடங்களில் 23, 24–ந் தேதிகளில் நடைபெறுகிறது.
 1. சென்னை – பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, 5, போலீஸ் லேன், சைதாப்பேட்டை, சென்னை– 15
 2. விழுப்புரம் – அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் 
3. சேலம் – ஜெயராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெத்திமேடு, சேலம்– 2 
4. கோவை – நல்லாயன் உயர்நிலைப்பள்ளி, கோவை– 1
 5. மதுரை – சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எம்.ஏ.கே.சாலை, மதுரை– 2 6. திருநெல்வேலி – ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.எம்.சத்திரம், பாளையங்கோட்டை
 7. திருச்சி – ஏ.டி.எம்.ஆர்.சி.எம். வாசவி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 11, பேர்ட்ஸ் சாலை, கன்டோன்மென்ட், திருச்சி.

 யார் யாரிடம் சான்று? 

 

              தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின்போது, வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை மேலொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அரசியல் அறிவியல் பாடத்திற்குரிய பின்னடைவு பணி இடங்களுக்கு (பேக்–லாக் வேகன்சி) தகுதி உள்ள தேர்வர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. 

                 அவர்களின் விவரம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in ) வெளியிடப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கல்வித்தகுதிக்கும் யார் யாரிடம் சான்று பெற வேண்டும் என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. 

எஸ்.எஸ்.எல்.சி. – பள்ளி தலைமை ஆசிரியர் 

பிளஸ்–2 – பள்ளி தலைமை ஆசிரியர் 

இளங்கலை பட்டம் – கல்லூரி முதல்வர் அல்லது பல்கலைக்கழக பதிவாளர் 

முதுகலை பட்டம் – கல்லூரி முதல்வர் அல்லது பல்கலைக்கழக பதிவாளர் 

பி.எட். பட்டம் – பல்கலைக்கழக பதிவாளர் மட்டும் 

               சான்றிதழ் சரிபார்ப்பின்போது, தமிழ்வழியில் படித்ததற்கான உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்காத பட்சத்தில் தமிழ்வழி முன்னுரிமை பணி இடத்திற்கு தேர்வர்கள் தகுதியற்றவராக கருதப்படுவார். 

                            3.8.2012 மற்றும் 30.10.2012 அன்று நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பின்போது, மேற்கண்டவாறு தமிழ்வழியில் படித்தற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்காதவர்கள் தற்போது உரிய சான்றிதழ்கள் பெற்றிருந்தால் அவர்கள் 27–ந் தேதி அன்று சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.




9 Comments:

  1. Botany result websitla kidaiyatha .oru velipadaithanmai ellamal ponathu

    ReplyDelete
  2. TRB Website notification says "The final provisional selection list published on 18.01.2013 for all the subject except Political Science and Tamil Medium candidates in History, Economics and Commerce". but Botany provisional results published on 8.4.13. why they are not update the Botany results in website. There is no cut off Details and Backlog vacancies. Verum Kakitha Arivippu thana. ithu varikkum Botany la CV mudichavangluku(except selected botany candidates) ethanai peruku total marks therium?. adutha examuku padikka vidama pandrangapa. Oru varuda Vethanaiyai sumanthu kondu padippathu enbathu.......

    ReplyDelete
  3. Cv list ku mattum server work aagum.

    anal final list notice board la mattum than work aagum.

    final list ku server work aagathu.

    ReplyDelete
    Replies
    1. Sir ethilurunthu enna theriyuthu botany a pali vangaranga .
      1.websitla podala
      2.cut off solla matranga trb officela
      3.case mudichalum athiga masam eluthadichathu
      4.backlog vacancy onnu kooda increase pannala.
      5.cross major select pannathu
      6.matra subjects ellorum join panni senior aki salary vangittu erukkanga
      6.totally manakastam panakastum koduthathu

      Delete
  4. case file pannavangalai nalla padiya select panna TRB ippa entha thavarum seiyatha appaviyalarkalai select pannathathu mana vedanaiyai koduthullathu.


    apa Court than TRB ya seyalpaduthu. board ethuku?

    ReplyDelete
  5. appo mattha PG SCIENCE ???????

    ReplyDelete
  6. Still Now The Board Website Never Announces the Science Subjects After C.V

    "Tamil Medium Candidates Non Available Non Tamil Medium Candidates Have Been Selected"_ WHY?

    They are Announces Only Before C.V

    "Tamil Medium Candidates Non Available Non Tamil Medium Candidates Have Been Called For C.V"

    It Means they Don't Fills the Tamil Medium Reservation of Science Subjects.

    ReplyDelete
  7. Previous Recruitment's of Poly technique and Engineering They Clearly Mentioned the C.V list and Selected List. But Now a days Board Never Releases the Final List. At least they mention in the Final Notification. They Never Do

    ReplyDelete
  8. science subject la tamil medium kidaiyathu endral 2013 callfor la tamil medium quota maru badiyum pottirukkangale ????

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive