ஜெ.இ.இ., முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று
வெளியானது. தமிழகத்தில் இருந்து, 3,198 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், இணையதளங்கள் மூலம், இன்று முதல் இரண்டாம் கட்ட
தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., ஆகிய உயர் கல்வி
நிறுவனங்களில், மாணவர் சேர்க்கைக்கு, ஒரே நுழைவுத் தேர்வு முறை (ஜெ.இ.இ.,)
இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான முதன்மை தேர்வு, ஏப்ரல்
மாதம் நடந்தது. நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் நடந்த
தேர்வில், 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இத்தேர்வு முடிவுகள், நேற்று வெளியானது. இதில், மும்பை மண்டலத்தில் இருந்து, 33,461, டில்லியிலிருந்து, 24,017, ஐதராபாத் மண்டலத்தில் இருந்து, 8,387 மாணவர்களும், புதுச்சேரியிலிருந்து, 338, தமிழகத்திலிருந்து, 3,198 மாணவர்கள் என, மொத்தம், 1.5 லட்சம் மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், இரண்டாம் கட்ட தேர்வு செய்ய உள்ளனர். இத்தேர்வுக்கு, www.jeeadvonline.iitd.ac.in, www.jeeadv.iitd.ac.in என்ற இணையதளங்கள் மூலம், இன்று (8ம் தேதி) காலை, 10:00 மணி முதல், 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கட்டண விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை, நுழைவு சீட்டு உள்ளிட்ட விவரங்களையும், இந்த இணையதளங்களில் பெறலாம். இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு, ஜூன், 2ம் தேதி நடக்க உள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...