Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.இ.டி : அறிவிக்க தயங்கும் டி.ஆர்.பி - கையை பிசையும் பயிற்சி மையங்கள் - Dinamalar


          ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கும் தேதியை அறிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம், காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், ஜூனுக்குள் பயிற்சியை முடித்து விடலாம் என, கணக்குப் போட்டிருந்த பயிற்சி மையங்கள் தற்போது கையை பிசைந்து வருகின்றன.

              கடந்த ஆண்டு, ஜூலை, 12ம் தேதி, முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 6.72 லட்சம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதியதில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். காலியிடங்களை விட மிகக் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றதால், டி.ஆர்.பி., உடனடியாக மறு தேர்வு ஒன்றை அறிவித்தது. அக்., 14ம் தேதி நடந்த மறு தேர்வில், 19,246 பேர் தேர்ச்சி பெற்றனர். 
               தகுதி மதிப்பெண் என நிர்ணயம் செய்யப்பட்ட 60 சதவீதம் (150க்கு 90 மதிப்பெண்) மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் பணி வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு வரை, பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் நடைபெற்று வந்தது.
           இதனால், ஆசிரியர் பயிற்சி முடித்த பலரும் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் உடனடியாக பணி வாய்ப்பு கிடைத்ததால், தகுதித் தேர்வுக்கு பலத்த மவுசு ஏற்பட்டது. 
                 இதையடுத்து, ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு டி.இ.டி., பயிற்சி மையங்கள் தோன்றின. இரண்டு முறை கோட்டை விட்டவர்கள், அடுத்த தகுதித் தேர்வு எதிர்பார்த்து, இந்த மையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர். 
                      மூன்றாவது தகுதித் தேர்வு, வரும் ஜூன் மாதம் நடக்கும் என, செய்திகள் வெளி வந்தபடி இருந்தது. ஆனால், இதுகுறித்த அறிவிப்பை வெளியிடாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்ந்து தயக்கம் காட்டிவருகிறது. 
                  கடந்த ஜனவரி முதல் ஐந்து மாதங்களாக பயிற்சி அளித்து வரும் மையங்கள், ஜூன் மாதம் தேர்வு நடக்கும் என்ற நம்பிக்கையில், கட்டணம் நிர்ணயித்து, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தி வருகின்றன. தேர்வு வரை வகுப்புகள் நடத்தப்படும் என, துவக்கத்தில் அறிவிப்பு செய்திருந்தன. 
                    ஆனால், தற்போது எப்போது தேர்வு நடக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடந்த, 10ம் தேதி சட்டசபையில் நடந்த பள்ளி மானிய கோரிக்கையின் போது, தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அறிவிக்கப்படவில்லை. 
                       மேலும், பயிற்சிக்கு வருபவர்களும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள்தான். பலர் சொந்த தொழிலும், தனியார் நிறுவன பணியாளர்களாகவும் உள்ளனர். மூன்று அல்லது நான்கு மாத பயிற்சிக்குப் பின், அரசு ஆசிரியராக பணியில் சேர்ந்து விடலாம் என எண்ணி, வழக்கமான பணியை ஒதுக்கி வைத்து பயிற்சி பெற்று வந்தனர். 
                              இனியும், வேலைக்கு செல்லாமல், பயிற்சிக்கு சென்றால் கடும் பணத் தட்டுப்பாட்டை எதிர் கொள்ள நேரிடும் என்பதால், தங்களின் வழக்கமான பணிகளுக்கு திரும்பி வருகின்றனர்.




11 Comments:

  1. govt will announce tet ?

    ReplyDelete
  2. intha varusam exam irukka illaya sollunga sir?

    ReplyDelete
  3. 60 % மதிப்பெண் எடுக்கமுடியாத(10 ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ) நல்லாசிரியராகிய நீங்கள் எப்படி உங்கள் மாணவருக்கு 99% வேண்டாம்,35% ற்காவது கற்றுத்தர இயலுமா?. உங்களை நம்பி எந்த தைரியத்தில் வருங்கால விஞ்ஞானிகளை,அறிஞர் சமுதாயத்தை ஒப்படைப்பது. 45% மதிப்பெண் பெற்ற ஆசிரியர்(அதாவது 45% மட்டுமே மூளையை உபயோகிக்க தெரிந்த) எப்படி திறம்பட மாணவருக்கு 100% கற்றுத்தர முடியும். தயவுகூர்ந்து எதிர்கால சமுதாயத்தை நல்ல ஆசிரியரிடம் தர முன்வருவோம். சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளது. எதிர்கால சமுதாயத்திற்கு கெடுதல் இல்லாத வழியை பாருங்கள் இடஒதுக்கீடு கோரும் நல்லாசிரியர்களே.

    ReplyDelete
  4. தகுதி தேர்வில் தோல்வி அடைந்த தனியார் பள்ளி ஆசியர்கள் தனியார் பள்ளிகளில் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்கிறார்களே
    அதற்கு என்ன காரணமா இருக்கும்

    ReplyDelete
  5. BC,MBC,Sc 60% mark edutha tha job ok ippa tet exam la 25000 teachers pass panranga 15000 teachers vacancy mattum tha iruku pass panna ellarukum job poduvangala reservation follow panni 15000 teacher ku job poduvangala please answer me previous comment

    ReplyDelete
  6. BC,MBC ku Exam fee 500 SC ku mattum 250 why? Posting la reservation follow panna kudatha? Pass panna ellarukum job sollum pothu exam fees yen same ah vanga kudathu?

    ReplyDelete
    Replies
    1. Dear padasalai author
      dont allow this like comments.
      Evanga atta kadichu matta kadichu kadaichil enga vanthittanga parthengala
      samuthayil ertra thalvu ullathu.oruthan kastapattu koorai veetil padippan oruthan ac roomil padippan.ethil sari anthasu kidaichacha.reservation India muluvathum follow pannum pothu tamilnadu mattum yen entha satta virotham.

      Delete
  7. TRB Exam calfer pannitanga Ethuku reservation follow panranga TET Exam la Reservation follow pannave illa appadi irukum pothu TRB mattum yen caste wise posting podranga TET pola posting podalame TET exam ku oru method TRBku oru method ah govt keta enna solluvanga kolkai mudivunu solluvanga enna koduma sir ithu

    ReplyDelete
  8. Dear padasalai author
    Dont allow this like comments plse sir.central govt follow panranga state govt follw pannanum entha reservation.Indian reservationa first break pannathu than EnthaTET exam .entha exam thevathana

    ReplyDelete
  9. TET exam not only for eligibility to reduce the mark here in tamilnadu eligibility-cum-job in government school and private school and here in tamilnadu lots of degree holder is there and our goverenment should follow some way to select(filter)us this is true
    some of them speak about NET SET exam marks reduction this exams only for eligibility not for job
    also the very important think is NET SET syllabus are very heavy load but TET is only 12th level
    "" Try hard reach success go ahead there will be good waiting for us ""
    All the best those who are going to write TET exam this year

    ReplyDelete
  10. ippa enna sir exam irukka illaya padikuravanga ella pavam romba kasta paduranga ithu niraya perudaya life

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive