Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உயர்கல்விக்கு தடை போடும் வறுமை: தவிப்பில் முதல் ரேங்க் மாணவி


            கொட்டாம்பட்டி அருகே வெள்ளாலபட்டியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியின் மகள் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றும் வறுமையால் உயர்கல்வி பயிலமுடியாத நிலையில் உள்ளார்.
 
 
             கொட்டாம்பட்டி ஒன்றியம் எம்.வெள்ளாலபட்டியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியின் மகள் தைரியலட்சுமி,17. நத்தம் தனியார் பள்ளியில் படித்த இவர், பிளஸ் 2ல், தமிழ்-182, ஆங்கிலம்-184, இயற்பியல்-192, வேதியியல்-194, உயிரியல்-183, கணிதம்-196 என மொத்தம் 1,131 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தை பிடித்தார்.

                மருத்துவம் படிக்க விரும்பும் தைரியலட்சுமிக்கு, வறுமையால் "கவுன்சிலிங்" செல்லக்கூட பணமின்றி சிரமப்படுகிறார். அவர் கூறுகையில்,""டாக்டராகி என்னைப் போன்ற ஏழை மக்களுக்கு சேவை செய்யவேண்டுமென்பது எனது கனவு. ஆனால், கவுன்சிலிங் கூட்டிச்செல்லவே பணமின்றி பெற்றோர் சிரமப்படுகின்றனர். இதனால், நானும் வேலைக்குச் செல்லும் நிலையில் உள்ளேன். உதவி கிடைத்தால் படிப்பேன்" என்றார்.

இவருக்கு உதவ 95970 76887ல் தொடர்பு கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive