2013-14ம்
கல்வி ஆண்டில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின்
தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்குகான பொதுமாறுதல் கலந்தாய்வு
மேற்கொள்ளப்பட உள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் பணிநிரவலில் மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டம், மாவட்டத்திற்குள் வேறு பள்ளிகளுக்கு மாறுதலில் சென்றவர்கள், அயற்பணியில் பணியாற்றும் மாவட்ட உதவித் திட்ட அலுவலர், மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நேர்முக உதவியாளர் (மேல்நிலை, உயர்நிலை) நிலையில் பணியாற்றி வருவோரில் 2013-14ம் ஆண்டில் ஓய்வு பெறுபவர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு 18ம் தேதி முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான இக்கலந்தாய்வு வருகிற 20ம் தேதி
காலை 9 மணி முதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும். அதே இடத்தில்
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் பதவி உயர்வு கலந்தாய்வு அதே
தினத்தில் பிற்பகல் 2 மணி முதல் நடைபெறும். உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு
21ம் தேதி இக்கலந்தாய்வு நடைபெற உள்ளது. உயர்நிலைப் பள்ளி
தலைமையாசிரியர்களின் பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு அதே தினத்தில்
பிற்பகல் 2 மணி முதல் நடைபெறும். மேல்நிலைப் பள்ளி முதுகலை
ஆசிரியர்களுக்கான (மாவட்டத்திற்குள் மாறுதல்) பொதுமாறுதல் கலந்தாய்வு
வருகிற 22ம் தேதி நடைபெற உள்ளது. இதே ஆசிரியர்களில் மாவட்டத்தில் இருந்து
மற்றொரு மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கேட்பவர்களுக்கு 23ம் தேதி
கலந்தாய்வு நடைபெறும்.
When will the newly upgraded school list be published.
ReplyDelete