இடைநிலை ஆசிரியர்கள் மற்றும்
சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான
பணிமூப்பு பட்டியல் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும்
வெளியிடப்பட்டுள்ளது.
17.12.2011 வரை நியமனம் பெற்ற இடைநிலை மற்றும்
சிறப்பாசிரியர்கள் இந்த பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் ஆவர்.
தமிழ்பாடத்தில் 4,382 பேர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள். 17.12.2011ஆம்
தேதி தகுதி நாளாக கொள்ளப்படும்.
கணித பாடத்தில் 158 பேர் பட்டதாரி ஆசிரியர்கள்
பதவி உயர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் தகுதி நாள் 12.7.2011
ஆகும். வரலாறு பாடப்பிரிவில் 346 பேரும், அறிவியல் பாடத்தில் 63 பேரும்,
ஆங்கில பாடத்தில் 93 பேரும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு
தகுதியுடையவர்கள் ஆவர். தகுதி நாள்: வரலாறு & 19.12.2011, அறிவியல்
& 7.12.2010, ஆங்கிலம் & 12.1.2011. இந்த பதவி உயர்வுகள் வரும்
ஜூன் மாதத்தில் வழங்கப்பட உள்ளது. பதவி உயர்வுக்கான பட்டியல் விவரங்கள்
அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. பெயர்
விடுபட்டுள்ள ஆசிரியர்கள், தலைமையாசிரியரின் பரிந்துரையை பெற்று முதன்மை
கல்வி அலுவலரை அணுகலாம். இத்தகவலை தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில
பொதுச் செயலாளர் இசக்கியப்பன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...