Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளைமுதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்


                தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க வியாழக்கிழமைமுதல் (மே 9) விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது.
 
              சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பப் படிவம் வழங்கப்படும்.

               40 ஆயிரம் விண்ணப்பங்கள்: தமிழகத்தில் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாநில ஒதுக்கீட்டுக்கு உரிய 1,823 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 800-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க மொத்தம் 40 ஆயிரம விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. விண்ணப்ப கட்டணம் ரூ.500. "Secretary, Selection Committee, Kilpauk, Chennai-10’ என்ற பெயரில் ரூ.500-க்கு வரைவோலை ("டி.டி.') அளிக்கும் நிலையில் விண்ணப்பம் வழங்கப்படும். தாழ்த்தப்பட்ட-பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவராக இருந்தால், சான்றொப்பமிட்ட வகுப்புச் சான்றிதழ் பிரதிகளைச் சமர்ப்பித்து விண்ணப்பத்தை இலவசமாகப் பெறலாம்.

                நாளை பிளஸ் 2 முடிவு: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 9) காலை வெளியிடப்படுகின்றன. பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க கடந்த மே 4-ஆம் தேதி முதல் அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பத்தை விநியோகித்து வருகிறது.

                   எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க வரும் 18-ஆம் தேதி வரை விண்ணப்பத்தை விநியோகிக்க மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர கடைசி தேதி வரும் 20-ஆம் தேதியாகும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive