Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஊதிய நிர்ணயக் குளறுபடி - பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் ஓர் ஒப்பாய்வு


       M.A/M.Sc., B.Ed., முடித்துவிட்டு ஒருவர் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான TET தேர்வு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TRB தேர்வு ஆகிய இரண்டிலுமே தேர்ச்சி பெற்றால் அவர் பட்டதாரி ஆசிரியராகப் பணியில் சேர்வதே சிறந்தது. 
 
          உயர்பதவியான முதுநிலை ஆசிரியராக நியமனம் பெற்றால் மாதம் ஒன்றுக்குக் குறைந்த பட்சம் ரூ.1152 வீதம் இழப்பு ஏற்படும். எப்படியெனில்,
 
I) பட்டதாரி ஆசிரியர் நுழைவுநிலை ஊதியம்:
அடிப்படை: 9300
தர ஊதியம்: 4600
M.A/M.Scக்கான ஊக்க ஊதிய உயர்வு: 840
அகவிலைப்படி: 11792
மருத்துவப்படி: 100
மொத்தம் : 26632 (வீட்டு வாடகைப்படி நீங்கலாக)

II) முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நுழைவுநிலை ஊதியம்:
அடிப்படை: 9300
தர ஊதியம்: 4800
அகவிலைப்படி: 11280
மருத்துவப்படி: 100
மொத்தம் : 25480 (வீட்டு வாடகைப்படி நீங்கலாக)

அதாவது உயர்பதவியில் நியமனம் பெற்றால் பிரதி மாதம் ரூ.1152 வீதம் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.13824 இழப்பு ஏற்படுகிறது.

1.1.96 ஊதியக்குழுவில் இதுபோன்ற முரண்பாடுகள் வராதவகையில்
இ.நி.ஆ: 4500-125
ப.ஆ: 5500- 175
மு.நி.ஆ: 6500- 200
என்றவாறு இருந்ததை நினைவு கூர்வோம்.

மேல்நிலைப் பணியில் நியமனம் பெற்றால் குறைந்த ஊதியமும் கீழ்நிலைப் பதவியில் நியமிக்கப்பட்டால் அதிக ஊதியமும் பெறுவதாக நடைமுறையில் உள்ள ஊதிய நிர்ணய முறை ஆசிரியர்களிடையே பீதியை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
நன்றி :  TESTF




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive