நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் பதவி உயர்வு
கவுன்சிலிங் இன்று துவங்குவதாக, திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்
(பொ) ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
திருச்சி மேலப்புதூர் புனித அன்னாள் நடுநிலைப்பள்ளியில், இன்று (28ம்
தேதி) காலை, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல்,
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு ஆணை வழங்குதல், மதியம்,
பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் ஒன்றியத்துக்குள் நடக்கிறது.
நாளை காலை, துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல்,
மதியம், துவக்கப்பள்ளி தலைமையாசிர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல்
ஒன்றியத்துக்குள் நடக்கிறது.
மே 30ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர் மாறுதல் ஒன்றியத்துக்குள்ளும்,
மதியம், இடைநிலை ஆசிரியர் மாறுதல் ஒன்றியம் விட்டு ஒன்றியம் விட்டு
மாவட்டத்திற்குள்ளும் நடக்கிறது. 31ம் தேதி காலை, இடைநிலை ஆசிரியர்
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் நடக்கிறது.
மே 30-ல் முதல்வரிடம் மனு அளிக்க பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு
ReplyDeleteகோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மே 30-ம் தேதி மனு அளிப்பது என வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராக. ராமு தலைமை வகித்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் ஆசிரியர் நியமன நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு என்பதை சிறப்பு அரசாணை மூலம் அறிவித்து உடன் பணி வழங்க வேண்டும்.
மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் பழைய விதிமுறைகளின்படி 2010-க்கு முன்புஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து பணிவழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30-ம் தேதி முதல்வரைச் சந்தித்து மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ், பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் என்.கே. சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் அரிகிருஷ்ணன் வரவேற்றார்.
அரியலூர் மாவட்டத் தலைவர் இளவரசன் நன்றி கூறினார்